பழிக்குப்பழி.. 2019க்கு 'ஸ்வீட் ரிவெஞ்ச்' எடுத்த கேன்.. இங்கிலாந்தை நியூஸி வீழ்த்தியது எப்படி?
துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் நியூசிலாந்து பைனலுக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு சென்றுள்ளது.
Recommended Video
2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இங்கிலாந்திடம் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இரண்டு அணிகளும் 241 ரன்கள் எடுத்து ஆட்டம் டிரா ஆன நிலையில் சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் 15 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கணக்குப்படி நியூசிலாந்து சமமான ஸ்கோர் எடுத்து இருந்தது. இந்த உலகக் கோப்பை முடிவு கிரிக்கெட் உலகையே பரபரக்க வைத்தது.

கோப்பை
இரண்டு அணிக்கும் கோப்பையை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீசம் போன்ற வீரர்கள் கூட, "இனி உங்கள் குழந்தைகளை கிரிக்கெட் ஆட விடாதீர்கள். கிரிக்கெட் வேண்டாம். அவர்கள் பேக்கரி போன்ற வேறு எதாவது தொழில் செய்யட்டும். அப்போதுதான் நன்றாக சாப்பிட்டு குண்டாக நிம்மதியாக வாழ்ந்து, வாழ்க்கையை முடிப்பார்கள். கிரிக்கெட் வேண்டாம்" என்று விரக்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

அதே நீசம்
தற்போது அதே ஜிம்மி நீசம் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை செமி பைனலில் இங்கிலாந்தை வீழ்த்திய கேம் சேஞ்சராக உருவெடுத்துள்ளார். ஆம் நேற்று ஆட்டம் முழுக்க இங்கிலாந்து கையில்தான் இருந்தது. முதலில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவருக்கு 166-4 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே ஒன் டவுன் பேட்ஸ்மேன் மொயின் அலி நியூசிலாந்துக்கு எதிராகவும் அதிரடியாக ஆடி 31 ரன்கள் எடுத்தார். மாலன் 41 ரன்கள் எடுத்தார்.

பிட்ச்
பிட்ச் முழுக்க முழுக்க நியூசிலாந்து அணிக்கு எதிராகவே இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் பெரிதாக ட்யூ வரவில்லை. பிட்ச் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்ததால் தொடக்கத்திலேயே நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து நிதானமாக ஆடி வந்தது. அதன்பின்தான் நியூசிலாந்து தோனி ஸ்டைலில் நிதானம் காட்டியது. ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்றால் ஆட்டம் மாறும் என்ற விதியை நியூசிலாந்து கையில் எடுத்தது.

நிதானம்
இதனால் விக்கெட்டை இழக்காமல் ஓவருக்கு 5-6 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து எடுத்து வந்தது. இதனால் 14வது ஓவரில் வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதோடு மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது. 7 விக்கெட் கையில் இருந்ததால் நியூசிலாந்து வேகம் காட்டியது. டார்லி மிட்சல் அதிரடி காட்ட தொடங்கினார். 15வது ஓவரில் 10 ரன்கள் சென்றது. அதன்பின் நெருக்கி பிடித்த இங்கிலாந்து 16 ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 3 ரன்கள் மட்டுமே கொடுத்தது.

நீசம்
அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து ஆல் ரவுண்டர் நீசம்தான் ஆட்டத்தை மாற்றினார். இறங்கிய முதல் பாலிலேயே சிக்ஸ், அதன்பின் பவுண்டரி, சிக்ஸ் என்று நீசம் கதற விட்டார். அந்த 17வது ஓவரில் மட்டுமே 23 ரன்கள் சென்றது. இன்னொரு பக்கம் 18வது மீண்டும் நீசம் சிக்ஸ் அடித்தார். அவரோடு சேர்ந்து கொண்ட டார்லியும் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் சென்றது.

ஆட்டம் மாற்றம்
18வது ஓவரில் நீசம் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தான் பிடித்த 11 பந்துகளில் நீசம் ஆட்டத்தையே மாற்றினார். 19வது ஓவரில் டார்லி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து பின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் சென்றது. இதன் மூலம் 19 ஓவரில் 167/5 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வென்றது. இங்கிலாந்தை வீழ்த்தி பைனல்ஸ் சென்றதோடு 2019 தோல்விக்கு நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications