Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருவெறுப்பு.. பழியை ஷமி மீது போடும் "விஷமிகள்".. இந்திய அணியின் தோல்வியால்.. மத ரீதியான தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய பவுலர் முகமது ஷமியை நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Recommended Video

    Shami-ஐ குறிவைக்கும் விஷமிகள்.. Indian Team தோல்விக்கு மத ரீதியான தாக்குதல்

    இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் நேற்று அதிரடியாக வென்றது. பாகிஸ்தான் இதில் டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது.

    இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது. இதுவரை 12 போட்டிகளில் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான் இன்று 13வது போட்டியில் வென்றுள்ளது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் பலர் இந்திய அணியின் கடின முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர். முக்கியமாக கோலி ஆட்டத்திற்கு பின்பாக பாபரிடம் நட்பாக பேசியது, ரிஷ்வானை கட்டிபிடித்தது என்று பாகிஸ்தான் இந்தியா அணி வீரர்களுக்கு இடையிலான நட்பு பாராட்டுகளையும், கவனத்தையும் பெற்றது. இதுதான் ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் என்று கூறி பலர் இந்திய அணி வீரர்களின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

    விஷம்

    விஷம்

    ஆனால் இன்னொரு பக்கம் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இணையத்தில் பலர் விஷத்தை கக்கி வருகிறார்கள். பாகிஸ்தான் அணியிடம் போய் தோல்வி அடைந்துவிட்டீர்களே.. நாம் அவர்களிடம் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததே இல்லை. இது மிகப்பெரிய அவமானம். இந்திய அணியின் கேப்டன் கோலியை நீக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் வைத்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    இந்த நிலையில்தான் இந்திய பவுலர் முகமது ஷமியை குறி வைத்து சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நேற்று ஷமி வீசிய 18 வது ஓவரில் வெறும் 5 பந்துகளில் 17 ரன்கள் சென்றது. அந்த ஒரு ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள் சென்றன. அந்த ஓவரில்தான் பாபர் ஆட்டத்தை பினிஷ் செய்தார். ஆனால் அதற்கு முன்பே ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு சென்றுவிட்டது.

    ஷமி போட்ட ஓவர்

    ஷமி போட்ட ஓவர்

    இந்திய பவுலர்கள் யாருமே நேற்று பெரிதாக பவுலிங் செய்யவில்லை. ஒரு வீரரால் கூட நேற்று விக்கெட் எடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் ஷமி போட்ட ஓவரால்தான் நாம் தோல்வி அடைந்தோம் என்று நெட்டிசன்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது ஷமியை இஸ்லாமியர் என்று கூறி கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

    இன்ஸ்ட்டா

    இன்ஸ்ட்டா

    அவர் மீது மத ரீதியாக கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவரின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு கீழே முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகளை சொல்லி அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். அருவெறுக்கத்தக்க வகையில் நிறைய கமெண்ட்கள் இவரின் இஸ்டா பக்கத்தில் போடப்பட்டு வருகிறது. எதோ ஓவரின் ஒரு ஓவரில் மட்டும்தான் ரன் சென்றது போல பழியை தூக்கி அவர் மீது போட்டுள்ளனர்.

    மத பிரச்சனை

    மத பிரச்சனை

    இந்திய அணியின் தோல்வியை மத ரீதியாக ஒரு கும்பல் திசை திருப்ப தொடங்கி உள்ளது. இந்திய அணியில் நேற்று எந்த பவுலரும் சரியாக ஆடாத நிலையில் இஸ்லாமியர் என்றே ஒரே காரணத்திற்காக ஷமியை மிக கடுமையான வார்த்தைகளால் சில விஷமிகள் விமர்சனம் செய்து வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதையடுத்து ஷமிக்கு சக வீரர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+