தமிழ்நாடு என்ஜினியருக்கு அமீரகத்தில் அடித்த யோகம்.. இனி ரேஞ்சு ரோவர் கார்லேயே போலாம்.. மாறிய தலைவிதி
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக சிவில் என்ஜினியராக உள்ள தமிழகத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் பால்துரை என்பவருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது. வேலைக்கு போன இடத்தில் கொட்டிய அதிர்ஷ்டத்தால் பல லட்சங்ளை பெற இருக்கிறார் பால்துரை.
இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு உள்ளது. ஒரே பாட்டில் பணக்காரர் ஆகும் சூர்ய வம்சம் சரத்குமார் போல, ஒரே நாளில் ஒரு சிலரின் வாழ்க்கையே தலைகீழாக லாட்டரி பரிசு மூலம் மாறிவிடுகிறது. லாட்டரி டிக்கெட் வாங்க பணம் இன்றி கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு கூட சில நேரங்களில் கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அடித்து, தலைவிதியே மாறிவிடும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கவே செய்கின்றன.

தமிழக என்ஜினீயருக்கு லாட்டரி பரிசு
இப்படி ஒரு சிலரின் வாழ்க்கை மாறினாலும் பலரும் வாழ்நாள் முழுக்க பணத்தை இழந்து ஏமாறி நிற்கும் நிலையும் இருக்கிறது என்பது எதார்த்தமான நிலை.. ஆனாலும், ஒருசிலரின் வாழ்க்கையில் அடிக்கும் அதிர்ஷ்டம் நமக்கும் அடித்துவிடாதா என ஆசைப்படும் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி விளையாடுகிறார்கள். அதேபோலத்தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு செல்லும் பலரும் அங்கு விற்பனையாகும் லாட்டரிகளை வாங்குகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை கட்டிட வேலைகள், டிரைவர்கள் என பல்வேறு வகையான வேலைகளில் இந்தியர்கள் பெருமளவு ஈடுபட்டு இருப்பதை காணலாம். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் துபாய், சவுதி அரேபியா போன்ற இடங்களுக்கு பிழைப்பு தேடி செல்கிறார்கள். வேலை செய்யும் இடத்தில் விற்கப்படும் லாட்டரிகளை வாங்கும் பலருக்கு உள்ளது. இதில் ஒரு இந்தியர்களுக்கு பரிசு அடித்து விடுகிறது.
ரூ. 87.90 லட்சம் மதிப்பு
சில ஆயிரம் தொகைக்கு வேலைக்கு போனவர்கள் பல கோடிகளுக்கு அதிபதியாகும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில்தான், தமிழகத்தை சேர்ந்த சிவில் என்ஜினியர் ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரக பிக் டிக்கெட் லாட்டரியில் கார் பரிசாக விழுந்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். தமிழகத்தை சேர்ந்தவர் பாபுலிங்கல் பால்துரை. 39 வயதான இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.
ஷார்ஜாவில் சிவில் என்ஜினியராக வேலை செய்து வரும் இவர் அபுதாபி பிக் டிக்கெ லாட்டரியின் ட்ரீம் கார் டிக்கெட் வாங்கியிருக்கிறார். 150 திர்ஹாம் கொடுத்து ட்ரீம் கார் டிக்கெட் வாங்கிய பால்துரைக்கு கனவு காரே கிடைத்துள்ளது. அதாவது இந்த லாட்டரியில் 2-வது பரிசு கிடைத்துள்ளது. இதன் மூலம் ரேஞ்ச் ரோவர் வேலர் கார் பரிசாக கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த காரின் விலை தோராயமாக ரூ. 87.90 லட்சம் ஆக விற்பனையாகிறது.
குழந்தைகளின் கல்வி செலவுக்கு
கிட்டதட்ட ஒரு கோடி ரூபாயை நெருங்கியுள்ள இந்த சொகுசு கார் பரிசாக கிடைத்து இருப்பதனால் உற்சாகம் அடைந்த பால்துரை இது தொடர்பாக கூறியதாவது:- கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நான் லாட்டரி வாங்கி வருகிறேன். தற்போது எனக்கு பரிசு அடித்துள்ளது. பரிசு கிடைத்ததை அறிந்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் வியக்கும்படியான தருணமாக இதை உணர்கிறேன்.
பரிசுத்தொகை அடித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர வைக்கிறது" என்றார். மேலும், காராக வாங்காமல் அந்த தொகையை பணமாக பெற பால்துரை திட்டமிட்டுள்ளார். இந்த தொகையை கொண்டு தனது கடனை அடைக்கவும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக துரை கூறினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications