UAE அமைச்சர்கள் உடன் சந்திப்பு.. 'Karunanidhi A Life' புத்தகத்தை பரிசாக தந்த முதல்வர் ஸ்டாலின்!
துபாய்: அரசு முறை பயணமாகத் துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களுடன் முதலீடு தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
உலக எக்ஸ்போ கண்காட்சி துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்தக் கண்காட்சியில் இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது.

உலக எக்ஸ்போ கண்காட்சி
இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் துபாய் புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாட்டில் தற்போது உள்ள தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அதாவது தமிழ்நாட்டிற்கான அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் முதல்வர் ஸ்டாலின்
192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்தியேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்போ கண்காட்சிக்காகவும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் இப்போது ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். முதல்வரின் இந்த 4 நாள் பயணத்தில், ஐக்கிய அமீரகத்தின் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

முக்கிய சந்திப்பு
இந்நிலையில், இன்றைய தினம் ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஐக்கிய அமீரகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகள் குறித்தும் முதலீடு, பொருளாதாரம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video

Karunanidhi A Life
அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை குறித்து இரு அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும், இரு அமைச்சர்களையும் அவர் தமிழகம் வருமாறும் அழைப்புவிடுத்தார். இது மட்டுமின்றி முதலீட்டாளர்கள் குழு அனுப்பி வைக்க அழைப்பு விடுத்தார். அப்போது ஐக்கிய அமீரக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களுக்கு 'Karunanidhi A Life', 'Journey of a Civilization Indus to Vaigai' ஆகிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications