துபாயில் உற்சாகமாக நடந்த வாலிபால் போட்டி: களம் இறங்கி அசத்திய தமிழர்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து விளையாடிய வாலிபால் போட்டி மிக உற்சாகமாக நடைபெற்றது.

துபாயின் முக்கிய பகுதியான அல் கிசஸில் இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முஹம்மது ஷாலி அவர்களின் தலைமையில் இந்த போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் துபாயில் பணியாற்றும் ஏராளமான தமிழ் இளைஞர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் களமிறங்கி விளையாடினர்.

Tamils Shine

இந்த விளையாட்டு நிகழ்வில், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் மாநில துணைத் தலைவர் அலீம் அல் புகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி சிறப்பித்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறப்பாக ஆடிய வீரர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களின் உடல் நலனைப் பாதுகாக்கவும், மன அழுத்தத்தைக் குறைத்து உடல்திறனை அதிகரிக்கவும் முஹம்மது ஷாலி தலைமையிலான குழுவினர் இதுபோன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். வார இறுதி நாட்களில் நடைபெறும் இந்த போட்டிகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே நல்ல நட்புணர்வையும் ஒற்றுமையையும் வளர்க்கப் பெரிதும் உதவுகிறது.

Tamils Shine

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாலிபால் போட்டியை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் நேரில் கண்டு ரசித்து, வீரர்களுக்கு உற்சாகக் குரல் கொடுத்து ஊக்கப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+