வீடியோவை பாருங்க.. டேப்லெட்டை காட்டி விமர்சித்த இபிஎஸ்.. அது கட்சி காசுங்க.. தங்கம் பரபர விளக்கம்!
துபாய்: முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தின் போது அவர் தனி விமானத்தில் பயணித்தது ஏன் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் துபாய் மற்றும் அபுதாபி பயணம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. துபாயில் கடந்த 3 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சந்திப்புகளை நடத்தினார். துபாய் வாழ் தமிழர்கள் முன் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
அதேபோல் தொழிலதிபர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதுவரை நடத்த சந்திப்புகள் மூலம் தமிழ்நாட்டில் 6100 கோடி ரூபாய் முதலீடு செய்ய பல்வேறு அமீரக நிறுவனங்கள் முன்வந்துள்ளன .

எடப்பாடி கேள்வி
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து நேற்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். அதில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் அரசு முறை பயணம் போல தெரியவில்லை. அவர் குடும்ப பயணம் சென்று இருப்பது போல சென்று உள்ளார். அவர் புதிய முதலீட்டை ஈர்க்க செல்கிறார் என்றால் ஏன் குடும்பத்தை அழைத்து செல்ல வேண்டும்? துறை சார்ந்த செயலாளர்கள் போனால் மட்டுமே போதுமே?

என்னை விமர்சித்தார்
நான் வெளிநாடு பயணம் மேற்கொண்ட போது அதை ஸ்டாலின் விமர்சனம் செய்தார். நீங்களே இந்த வீடியோவை பாருங்கள் (கையில் இருக்கும் டேப்லெட்டை எடுத்து காட்டி வீடியோவை போடுகிறார்). பாருங்கள் இதில் நான் வெளிநாடு செல்வதை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். என்னுடன் அமைச்சர்கள் வந்ததை பற்றி அன்று ஸ்டாலின் அப்படி பேசினார். எங்கள் அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை என்று அன்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்தார்.

கேள்வி
அதோடு முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணத்திற்கு தனி விமானத்தில் சென்றது ஏன் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு துபாய் சென்று இருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் தனி விமானத்தில் சென்றது அவைலபிலிடி காரணமாகவே. பொது விமான சேவையில் டிக்கெட் கிடைக்கவில்லை. அதே சமயம் தனி விமானம் என்பதால் இதற்கு அரசாங்கம் செலவு செய்யவில்லை. இது கட்சி ரீதியாக செலவு செய்யப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளின் தனி விமான போக்குவரத்து செலவை திமுகதான் செய்துள்ளது. இது அரசாங்க செலவு கிடையாது. அதிமுக ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்ததாக கூறுவதை ஏற்க முடியாது. அதன் நிலைதான் எல்லோருக்குமே தெரியுமே. அவர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்ட முதலீடுகள் எல்லாம் வெறும் விளம்பரங்கள். எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணம் வெற்றிப்பயணம். இந்த முதலீடு செயல்படுத்தப்படும் என்று தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications