துபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் இன்று 25.01.2019 காலை 10 மணியளவில் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஐக்கிய அமீரக துபாய் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 25வது மாபெரும் ரத்த தான முகாம் துபாய் அரசாங்க லத்திபா மருத்துவமனை உடன் இனைந்து தமுமுக அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில், தமுமுக அமீரக துணை தலைவர் ஏஎஸ் .இப்ராஹிம், தமுமுக அமீரக பொருளாளர் டாக்டர். அப்துல் காதர், தமுமுக அமீரக துணை செயலாளர் கஜ்ஜாலி ஆகியோர் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் சஞ்சீவ் குமார், தூதரக அதிகாரி (consul), அமீரக திமுக தலைவர் எஸ். எஸ்.மீரான், எமிரேட்ஸ் செம்பிறை சமூக விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ஃபைஸ் முகம்மது, முஸ்லிம் லீக் அமீரக பொதுச்செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், தொழிலதிபர் இளையான்குடி அபுதாஹீர், டாக்டர் முகையதீன், தொழிலதிபர் ஹசீனா, தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்,,காங்கிரஸ் பொருப்பாளர் ஜுனைத், முஸ்லிம் லீக் துபாய் மண்டல பொருப்பாளர் பரக்கத் அலி, அமானுல்லாஹ், சகோ. நியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.

இதில் தமுமுக துபாய் மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது, தமுமுக துபாய் மண்டல செயலாளர் ஷேக் தாவுது,மமக துபாய் மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், தமுமுக துபாய் மண்டல துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மக்கள் செய்தி தொடர்பாளர் திருச்சி பிலால்,மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக்,துபாய் மண்டல தமுமுக ஊடக பிரிவு செயலாளர் முத்துப்பேட்டை பைசல் மற்றும் மண்டல,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அயல்நாட்டிலும் தமுமுக சேவைகளை இந்திய தூதரக அதிகாரி பாராட்டினார். தமுமுக நடத்திய இரத்த தான முகாம்கள் அனைத்து மக்களுக்கும் மிக அவசியமானதும் இக்காலகட்டத்தில் மிக முக்கியமானதும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியை தமுமுக அமீரக துனை தலைவர் சகோதரர் ஏஎஸ் இபுராகிம் தொகுத்து வழங்கினார் 100 மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு ரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications