அமெரிக்காவுக்கு கால் கட்டு.. ஐக்கிய அமீரகம் அதிரடி! ஈரானை இனி நெருங்க முடியாது.. புலம்பும் டிரம்ப்!
துபாய்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. அப்படி ஒரு போர் வந்தால், ஈரானை பாதுகாக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரானை கட்டுப்படுத்திவிட்டால், மொத்த அரபு தேசங்களையும் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட முடியும். அப்படி செய்வது லேசுபட்ட காரியம் கிடையாது. இருப்பினும் அமெரிக்கா இதை எளிதில் விடுவதாகவும் தெரியவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இரு நாடுகளுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம்.

அமெரிக்காவின் தாக்குதல்
அது நடந்தால், தனது கை ஓங்க வேண்டும் என அமெரிக்கா முயற்சிக்கும். ஏனெனில், போரை பொறுத்தவரை தாக்குபவர்களுக்குதான் அதிக நேரம் கிடைக்கும். தாக்குதலை எதிர்க்கொள்பவர்களுக்கு குறைந்த நேரமே கிடைக்கும். எனவே, அமெரிக்காதான் முதலில் தாக்குதலை தொடங்கும். இதற்குதான் அரபு நாடுகளில் தனது படைகளை அமெரிக்கா நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.
அமெரிக்க படைகள்
- கத்தாரில் அல் உடீத் விமான தளம்
- பஹ்ரைனில் கடற்படை ஆதரவு தளம்
- குவைத்தில் கேம்ப் ஆரிப்ஃஜான் தரைப்படைத்தளம் மற்றும் அலி அல் சலீம் விமான தளம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் தஃப்ரா விமான தளம் மற்றம் ஜெபல் அலி துறைமுகம்
- சவுதியில் முவாஃபாக் அல் சால்டி விமான தளம்
- ஈராக்கில் ஜன் அல் சதாத் விமான தளம் மற்றும் ஏர்பில் விமான தளம்
ஈரானை தாக்க பயன்படும் தளம்
என, சுற்றுவட்டாரங்களில் ஏராளமான ராணுவ தளங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. இதில் மிகப்பெரியது கத்தாரில் அல் உடீத் விமான தளம்தான். இங்கு 11,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருகிறார்கள். இங்கிருந்து ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான விமானங்களை இயக்க முடியும். அதேபோல ஈரானை தாக்க வேண்டும் எனில் முதலில் இந்த விமான தளம்தான் பயன்படுத்தப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளமும் ஈரானை தாக்க முதலில் பயன்படுத்தப்படும்.
இந்த விமான தளத்தில் F-22, F-35 போன்ற அதிநவீன விமானங்களும், B-52 போன்ற குண்டு வீச்சு விமானங்களும் உள்ளன. ஆனால் இங்குதான் அரபு நாடுகள் செக் வைத்திருக்கின்றன.
ஈரான் குறித்து அச்சம்
அதாவது, தங்கள் நாட்டு ராணுவ தளங்களை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று, அமெரிக்காவுக்கு சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்று கூறியுள்ளது. இந்த நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடந்த தங்கள் வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளன. ஒருவேளை அமெரிக்கா தங்கள் வான்வெளியை பயன்படுத்தினால்.. தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்கிற அச்சத்தால் இவ்வாறு கூறியுள்ளன.
யோசிக்கும் டிரம்ப்
மட்டுமல்லாது ஈரானுடன் போர் வெடித்தால்.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். இது அரபு நாடுகளின் வருவாய்க்கு ஆபத்து. எனவேதான் இப்படியான நிபந்தனைகளை இந்த நாடுகள் விதித்துள்ளன. இதனால் டிரம்ப் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications