ஐக்கிய அரபு அமீரக மக்கள் இந்தியா செல்ல அதிரடி தடை.. ஆனால் இவர்களுக்கு மட்டும் விலக்கு.. முழு விவரம்
துபாய்: கொரோனா அச்சறுத்தல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் பயணம் செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. .
கொரோனா அச்சறுத்தல் காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு விமான சேவை ஓரளவு சீரடைந்து விட்டது.
ஆனால் சர்தேச விமான சேவை இன்னும் சீரடையவில்லை. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்தும் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா செல்ல தடை விதிப்பு
இந்த நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் பயணம் செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஜூலை 21-ம் தேதி வரை இந்த நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் தடை நீட்டிப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது.

வேறென்ன நாடுகள்?
லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக மக்கள் செல்லக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் இதில் ஒரு சில விலக்குகளும் உள்ளன.

வர்த்தகரீதியான பயணம் உண்டு
அதாவது சரக்கு விமானப் போக்குவத்து, வர்த்தகரீதியான தனிப்பட்ட நபர்கள் பயணிக்கும் சிறிய விமானங்கள் கட்டுப்பாடுகளுடன் இயக்கி கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய அரபு அமீரகம் திரும்பும் மக்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் கொரோனா தடுப்பு வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சிகிச்சை பெற அனுமதி
அதே வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் ஐக்கிய அரபு அமீரகம் வந்து சிகிச்சை பெற விரும்பினால், உரிய அனுமதி பெற்ற பிறகு இங்கு அனுமதி அளிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை பெற அனுமதி வழங்கப்படும். கொரோனா தங்கள் நாட்டுக்கு பரவி விடாமல் தடுப்பதற்காகவே மேற்கண்ட உத்தரவு வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications