அமீரகத்தில் பெட்ரோல் விலை ரூ.113.. சென்னையை விட விலை அதிகம்.. இது உங்களுக்கு தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

துபாய்: அமீரகம் என்றாலே அங்கு எரிபொருள் விலை குறைவாக இருக்கும் என்றே நாம் நினைத்திருப்போம். ஆனால், சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் குழப்பங்கள் காரணமாக இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் அமீரகத்தில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது.

ஐக்கிய அமீரகம் என்று சொன்னாலே பலருக்கும் அங்கு மிக குறைந்த விலைக்கு விற்கப்படும் எரிபொருள் தான் நினைவுக்கு வரும். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், அங்கு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் பல நகரங்களில் இருப்பதைவிட அமீரகத்தில் எரிபொருள் விலை அதிகமாகியுள்ளது.

UAE Petrol Price

இந்தியா Vs ஐக்கிய அரபு அமீரகம்

அக்டோபர் 22ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் 14 நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.54 முதல் ரூ.116.15 வரை உள்ளது. சண்டிகரில் குறைந்தபட்சமாக ரூ.101.54க்கும், ஹைதராபாத்தில் அதிகபட்சமாக ரூ.116.15க்கும் பெட்ரோல் விற்பனையானது. டீசல் விலையை பொறுத்தவரை, சண்டிகரில் லிட்டர் ரூ.89.47க்கும், திருவனந்தபுரத்தில் ரூ.104.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மறுபுறம் அமீரகத்தை எடுத்து பார்த்தால்.. அக்டோபர் மாதத்துக்கான எரிபொருள் விலை பெட்ரோல் வகையை பொறுத்து லிட்டருக்கு 4.21 முதல் 4.40 திர்ஹாம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 4.80 திர்ஹாமாக உள்ளது. அக்டோபர் 22ம் தேதி ஒரு திர்ஹாமின் மதிப்பு சுமார் ரூ.25.69 என்று வைத்து கொண்டால் கூட E-Plus 91 பெட்ரோல் லிட்டர் ரூ.108.17க்கு விற்கப்படுகிறது. Special 95 பெட்ரோல்: லிட்டர் ரூ.109.95க்கும், Super 98 பெட்ரோல்: லிட்டர் ரூ.113.03க்கும் விற்கப்படுகிறது. டீசல் வில லிட்டருக்கு ரூ.123.31க்கு விற்பனையாகிறது.

சென்னை

ஒப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் அக்டோபர் 22ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.76 ஆகவும், டீசல் விலை ரூ.99.55ஆகவும் உள்ளது.

அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை ரூ.109.95ஐ விட சென்னையில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. டீசல் விலையிலும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. சென்னையில் லிட்டர் ரூ.99.55க்கு விற்பனையாகும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.123.31 ஆக உள்ளது.

விலை ஏன் உயர்ந்தது?

சர்வதேச எரிசக்தி சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ஐக்கிய அமீரகத்தில் எரிபொருள் விலைகள் மாற்றி அமைக்கப்படும். அக்டோபர் மாதத்தில் அங்குள்ள மூன்று பெட்ரோல் வகைகளின் விலையும் சுமார் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. செப்டம்பரில் லிட்டர் 3.80 திர்ஹாமாக இருந்த சூப்பர் 98 பெட்ரோல், அக்டோபரில் 4.40 திர்ஹாமாக உயர்ந்தது. ஸ்பெஷல் 95 பெட்ரோல் 3.69 திர்ஹாமிலிருந்து 4.28 திர்ஹாமாகவும், E-Plus 91 பெட்ரோல் 3.61 திர்ஹாமிலிருந்து 4.21 திர்ஹாமாகவும் அதிகரித்தன. டீசல் விலை 4.30 திர்ஹாமிலிருந்து 4.80 திர்ஹாமாக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை மீது ஏற்பட்டுள்ள அச்சம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு ஆகியவை எண்ணெய் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அக்டோபரில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலரை தாண்டிய நிலையில், அதுவே சவுதியில் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+