Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமீரக தமிழர்களுக்கான குறும்பட போட்டி.. வெற்றியாளர்களை தேர்வு செய்த நடிகை வினோதினி.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் அமீரக தமிழர்களின் திறனை ஊக்குவிக்கும் அமீரக குறும்பட விழாவில் திரையிடப்பட்ட 13 குறும்படங்களில் இருந்து, நடிகை வினோதினி வைத்தியநாதன் வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.

கடந்த வார இறுதியில் மூன்று பகுதிகளாக துபாயில் நடைபெற்ற குறும்பட போட்டியின் 7ஆம் ஆண்டு விழாவில், தன் வசீகர குரலாலும் நகைச்சுவையாலும் குணச்சித்திர நடிப்பாலும் பலவிதமான கதாபாத்திரங்களில் ஜொலித்து வரும் பிரபல நடிகை வினோதினி நடுவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

UAE Short film Festival

இந்த விழாவில் திரையிடப்பட்ட 35 க்கும் மேற்பட்ட கதைகளில் 12 நிமிடங்களில், 12 நபர்கள் மட்டும் பங்கு பெறக்கூடிய கதைகளில் 12 தேர்ந்தெடுக்கப்பட்டு குறும்படங்களாய் உருவானது. தமிழ் திரை உலகின் முடிசூடா மன்னன் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் வாழ்க்கை பயணமும், ஒரு குழுவினரின் முயற்சியாக சிறப்பு திரையீட்டிற்கு தயாரானது.

சனிக்கிழமை மார்ச் 28 ம்தேதி மாலை துபய் போர்ட் சயீத் பகுதியில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் சுவாரசியமான பல கேள்விகளுக்கு நகைச்சுவையுடனும் ஆர்வத்துடனும், மனம் திறந்த அறிவுபூர்வமான தகவல்களை பகிர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மார்ச் 29ஆம் தேதி ஞாயிறன்று காலை, கோல்ட் சூக் பகுதியில் உள்ள ஸ்டார் கலேரியா திரையரங்கின் பெரும் திரையில், போட்டியிட்ட 13 குறும்படங்களை 350 க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் கண்டு களித்தார்.

அன்று மாலையே, போட்டியிட்ட படங்களை பரிசீலித்து, கரூத் பகுதியில் உள்ள அரங்கில் நடைபெற்ற வெற்றி விழாவில், கதை தேர்ந்தெடுப்பு முதல் அனைத்து குறும்படங்களைக் குறித்த தன் கருத்துக்ககளை பகிர்ந்து, 28 வெற்றியாளர்களை அறிவித்து பங்கு கொண்டவர்களையும் பார்வையாளர்களையும் பலத்த கைத்தட்டல்களுக்கிடயே மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

2026 அமீரக குறும்பட விழாவின் வெற்றியாளர்களின் விவரங்கள்:

1. பெறப்பட்ட முதல் குறும்பட கதை வசனம்: அதிகார நிழல்/ ஷங்கர் மஹாதேவன்

2. பெறப்பட்ட முதல் குறும்பட பதாகை: ஓர்மை / அர்விந்த் பாரதி

சிறந்த குறும்பட பதாகை

1.திரை கடல் ஓடியும் - சுரேஷ் பாபு

2. ஆல்ட்+கண்ட்ரோல்+லைஃப் - ஜசீலா பானு

சிறந்த உடை/ஒப்பனை

1. கணேசா-கோபால்

2. உப்பு- அர்ச்சனா ராஜேஷ்குமார் , சுப்ரஜா ராமகுமார்

சிறந்த அறிமுகம்

நடிகர்: ப்ரசாத் குணசேகரன்/மீள் நிலை

நடிகை : பூஜா பாலகிருஷ்ணன் / ம்யூட் லவ்

கதை திரைக்கதை/வசனம் : கோகுல் வாசுதேவன், தார்வேஷ் முஸ்தஃபா/ மோஹக்

இயக்குனர்: எஸ். கே. ஷங்கர்

சிறந்த ஒளிப்பதிவு

1.குறும்படம்: அன்பு செய் - முர்ஷித் ரஹுமான்

2.குறும்படம்: ம்யூட் லவ் - சந்தோஷ் நெல்சன்

சிறந்த கதை, திரைக்கதை வசனம்

1. திரை கடல் ஓடியும்- சுரேஷ் பாபு

2. ஆல்ட்+கண்ட்ரோல்+லைஃப் - ஜசீலா பானு

சிறந்த இசை

1. பாரு பாட்ரிக் பவி - நெல்சன் பீட்டர்

2. இரண்டாம் அத்தியாயம் - ஆண்டனி ஹுபர்ட்

சிறந்த குழந்தை நட்சத்திரம்

1. ப்ரித்விக் செல்வகுமார் -அன்பு செய்

2. மருதுளா மன்னர் மன்னன் -இரண்டாம் அத்தியாயம்

சிறந்த குணச்சித்திர நடிப்பு

1. ராமனாதான் - மோஹக்

2. ஷங்கர் - கட்டம்

சிறந்த நடிகர்

1. வீர வீரமணி - ஓர்மை, இரண்டாம் அத்தியாயம்

2. அன்பன் கோவிந்தராஜன் - கணேசா

சிறந்த நடிகை

1. ரேவதி கிருஷ்ணா - பாரு பாட்ரிக் பவி, கணேசா

2. ஸ்ரீஜா விஜயன் - உப்பு, ஆல்ட் + கண்ட்ரோல்+ லைஃப்

சிறந்த இயக்குனர்

1. ராவண் நவின்- க்ளாசா

2. இம்ரான் பாஷா - ம்யூட் லவ்

சிறந்த குறும்படம் 2025

1. க்ளாசா - ராவண் நவின்

2. இரண்டாம் அத்தியாயம் - லலிதா ரமேஷன்

அமீரகத்தில் நிலவும் பதட்டமான வளைகுடாபோர் சூழலிலும், நில்லாது பெய்து சூழ்ந்த மழை நீரிலும், தளராது நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய நன் கொடை அளித்த புரவலர்கள், உடனிருந்து உதவிய உறுதுணை குழு, ஆர்வத்துடன் பங்குபெற்ற குறும்பட குழுவினர், வருகை தந்து பாராட்டி மகிழ்ந்து கொண்டாடிய பார்வையாளர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆனந்த் மற்றும் ரமா பலர் நன்றி கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+