இந்தியர்களுக்கு 3 மாதம் இலவச விசா.. அமீரகம் சூப்பர் ஆஃபர்! ஆனா சில கண்டிஷன்கள் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இனி அமீரகம் செல்ல விசா எடுக்க தேவையில்லையாம். வரும் அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் அமீரகம் சென்று வரலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்தியர்கள் துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரக நகரங்களுக்கு செல்வதை வாடிக்கையாக உள்ளனர். முன்பெல்லாம் வேலைக்காக மட்டுமே அமீரகம் சென்று வந்த நிலையில், இப்போது சுற்றுலாவுக்கு அங்கு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமீரகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

UAE Visa-Free Entry for Indians

அமீரகம்

அதன்படி அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இப்போது புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு விசா இல்லாமல் அமெரிக்கா சென்று வரலாம். முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 20,000 விசாக்கள் வரை வழங்கப்பட உள்ளன.

அதேநேரம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தானாக இந்த விசா இல்லாத என்டரி கிடைக்காது. மாறாக குறிப்பிட்ட சுற்றுலா பேக்கேஜை முன்பதிவு செய்யும் தகுதியான இந்திய பயணிகளுக்கு மட்டுமே விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கு பயணிகள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கண்டிஷன்கள்

இந்தியாவில் இருந்து பயணம் செய்ய வேண்டும். மலேும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பார்ட்னராக இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அல்லது ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள் மூலம் அபுதாபி ஹாலிடே பேக்கேஜை முன்பதிவு செய்ய வேண்டும். அபுதாபியில் உள்ள ஹோட்டலில் குறைந்தது தொடர்ந்து 3 இரவுகள் தங்க வேண்டும். நேரடியாக இந்தியாவிலிருந்து புறப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் வகையில் விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

அதாவது, நேரடியாக அமீரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்து இந்த இலவச விசாவை பெற முடியாது. இந்த சலுகை குறிப்பிட்ட அபுதாபி சுற்றுலா பேக்கேஜை தேர்வு செய்வோருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இமைக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்யப்படும்

இந்த திட்டத்தின் கீழ் உள்ள டிராவல் பார்ட்னர்கள், டிசிடி அபுதாபி நியமிக்கும் நிறுவனம் மூலம் பயணிகளுக்கான விசா செயல்முறையை மேற்கொள்ளலாம். அதன் மூலம் விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். ஒருவேளை வேறு நிறுவனம் மூலம் விசா எடுத்தாலும் கூட அந்த தொகையை அபுதாபி திரும்ப வழங்கிவிடுமாம். அதாவது பயணிகளிடம் விசா கட்டணம் வசூலிக்கப்படாமல், சுற்றுலா துறை நேரடியாக அந்த செலவை ஏற்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த சிறப்பு சலுகை வரும் அக்டோபர் 31 வரை, அதாவது 3 மாதங்கள் மட்டுமே அமலில் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் 20,000 விசாக்கள் வரை வழங்கப்பட உள்ளதால், இந்த காலகட்டத்தில் அபுதாபி செல்ல திட்டமிடும் இந்தியர்கள் சரியான டிராவல் பார்ட்னர்கள் மற்றும் தகுதியான பேக்கேஜ் விவரங்களை முன்கூட்டியே சரிபார்ப்பது முக்கியம்.

எதற்கு இந்த திட்டம்?

அபுதாபி என்பது இந்தியர்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு இந்திய பயணிகளை ஈர்க்கும் வகையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்களை ஈர்க்கும் வகையிலேயே விசா கட்டணத்தை நாங்களே ஏற்கிறோம் என அபுதாபி அறிவித்துள்ளது. இந்தியர்கள் வெறும் சில நாட்கள் மட்டுமே அமீரகம் செல்வதை மாற்றி, அபுதாபியின் கலாச்சாரம், பொழுதுபோக்கு, ஹோட்டல்கள் மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுலா இடங்களை அதிக நாட்கள் அனுபவிக்கும் வகையில் நீண்ட கால விசாவை இது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று தான். அதாவது அமீரகம் செல்லும் அனைவருக்கும் இந்த இலவசம் கிடைக்காது. மாறாக குறிப்பிட்ட சுற்றுலா பேக்கேஜ்ஜை தேர்வு செய்யும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எனவே, ஒரு முறை இரண்டு முறை உங்கள் பேக்கேஜ் பொருந்துமா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+