பந்தயம் அடித்த அஜித் குமார்.. வாழ்த்து + புகழ்ச்சியுடன் உதயநிதி, அண்ணாமலை போட்ட முக்கிய பதிவு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் அஜித் குமார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நடிகர் அஜித் குமார் விடா முயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

ajith kumar udhayanidhi stalin annamalai

இதற்கிடையே தான் நடிகர் அஜித் குமார் சொந்தமாக கார் ரேஸ் அணியை உருவாக்கி உள்ளார். அஜித் குமார் ரேஸிங் அணி என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அணி துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்றது. துபாயில் 24எச் சீரிஸ் ரேஸில் அஜித்குமார் அணி பங்கேற்றது. விதியின்படி 24 மணிநேரம் தொடர்ச்சியாக காரை ஓட்ட வேண்டும். ஒரு அணியில் 3 முதல் 4 ஓட்டுநர்கள் இருப்பார்கள். அவர்கள் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் ஓட்ட வேண்டும். இதில் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் அஜித் குமார் அணி 3ம் இடம் பிடித்தது.

இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடத்தை பிடித்துள்ளதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுதுறை லோகோவை பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அஜித்குமார் இன்னும் இதுபோல் தொடர்ந்து வெற்றி பெற்று நம் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛துபாய் 24எச் தொடரில் 991 பிரிவு கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் அணி 3ம் இடம் பிடித்துள்ளது இந்தியாவுக்கு பெருமையான தருணமாக உள்ளது. அஜித் குமார் தான் பங்கேற்கும் துறைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார். அஜித் குமார் தனது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் பலரையும் ஊக்குவித்து வருகிறார்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+