உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா! கேக் வெட்டி துபாயில் கொண்டாடும் அமீரகத் திமுக!
துபாய்: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத் திமுக சார்பில் துபாயில் கேக் வெட்டி கொண்டாடப்படவுள்ளது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை ஒட்டி, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் திமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் அமீரகத் திமுக சார்பில் உதயநிதி பதவியேற்பு விழாவை கொண்டாடும் நிகழ்வானது துபாயில் இன்னும் சில மணி நேரங்களில் நடைபெறுகிறது.

அமீரகத் திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் துபாய் வாழ் தமிழர்களும், திமுகவினரும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர்.
துபாய் தேரா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுக்காக பிரம்மாண்ட கேக் வெட்டப்படவுள்ளது. அண்மையில் தான் அமீரகத் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இப்போது அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை கொண்டாடும் நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை போலவே துபாயிலும் தொடர்ச்சியாக திமுக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications