அம்மாடி தலையே சுத்துது.. துபாயின் காஸ்ட்லி வீடு.. ரூ. ₹1,351 கோடி கொடுத்து வாங்கிய அம்பானி!
துபாய்: உலகின் மிக உயர்ந்த ரியல் எஸ்டேட் மார்கெட்டை கொண்ட துபாயில் இதுவரை விற்பனையான டாப் 5 வீடுகள் குறித்து நாம் பார்க்கலாம். இதில் ஒவ்வொரு வீட்டின் விலையைக் கேட்டாலே நமக்கு தலையே சுற்றுகிறது. அதிலும் இதில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் வீட்டை யார் வாங்கியது தெரியுமா? இது குறித்தும் நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஐக்கிய அமீரக நகரங்களில் ஒன்றான துபாய், கச்சா எண்ணெய்யை வைத்தே வளர்ச்சியடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கச்சா எண்ணெய்யைத் தாண்டி தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் நீண்ட காலமாகவே அமீரகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன்படி உலகின் பொருளாதார மையமாக துபாய் வளர்ந்து வருகிறது.

துபாய் ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் சந்தையிலும் சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரும் பணக்காரர்களையும் ஈர்க்கும் இடமாக துபாய் இருக்கிறது. இதனால் துபாயில் ஒரு ஆடம்பர வீடு வாங்க வேண்டும் என்பதே பல பணக்காரர்களின் திட்டமாக இருக்கிறது.. கடந்த 10-15 ஆண்டுகளில், துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து, சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.
துபாயில் வீடுகள் என்பது வெறும் கட்டிடங்கள் அல்ல.. அவை கட்டிடக்கலை அற்புதங்கள், வாழ்க்கை முறை அடையாளங்கள் மற்றும் அந்தஸ்தின் குறியீடுகளாகும். இதற்கிடையே துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான 5 வீடுகள் குறித்தும்.. அந்த வீடுகளை வாங்கியவர் யார் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.!
அம்பானி
துபாயில் இதுவரை விற்பனையான வீடுகளில் மிக அதிக விலைக்கு விற்பனையான வீடு பாம் ஜுமேரா வில்லா தான். இது 600 மில்லியன் திர்ஹம்கள், அதாவது அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. ₹1,351 கோடிக்கு விற்பனையானது. இந்த வீட்டை வாங்கியவர் வேறு யாரும் இல்லை.. இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரும் ஆசியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி தான் அந்த வில்லாவை வாங்கினார். பனை ஜுமேராவில் உள்ள இந்த பிரம்மாண்டமான வில்லா, ஒரு கட்டுமான அற்புதம் மற்றும் ஆடம்பரத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.

துபாயில் இரண்டாவது காஸ்ட்லி வீடும் பாம் ஜுமேராவில் தான் உள்ள அமைந்துள்ளது. 'கோமோ ரெசிடன்சஸ் பென்ட்ஹவுஸ்' என்ற வீட்டை இது 2023ஆம் ஆண்டில் 500 மில்லியன் திர்ஹம்கள், அதாவது அன்றைய இந்திய மதிப்பில் ரூ.1125 கோடிக்கு விற்கப்பட்டது. நக்கீல் என்ற நிறுவனமே அந்த வீட்டைக் கட்டி விற்றது. இருப்பினும், வாங்கியவரின் தகவல்கள் வெளியிடப்படவில்லை. 22,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பென்ட்ஹவுஸ், உயர்தர வடிவமைப்பு, அல்ட்ரா-லக்ஸரி வசதிகள், ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த பென்ட்ஹவுஸ்களில் இதுவும் ஒன்றாகும்.
அடுத்தடுத்த இடங்கள்
துபாயின் ஆடம்பர ரில் எஸ்டேட்டில் 3வது இடத்தில் இருப்பது 'மர்சா அல் அரப் பென்ட்ஹவுஸ்' உள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்த வீடு 420 மில்லியன் திர்ஹம்ஸ், அதாவது ரூ.944 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவும் உலகின் பெரும் பணக்காரர்களை ஈர்த்த ஓர் அதிநவீனச் சொகுசு குடியிருப்பாகும்.
அடுத்த இடத்தில் 'பல்கேரி லைட்ஹவுஸ் அபார்ட்மென்ட்' இருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இந்த குடியிருப்பு 410 மில்லியன் திர்ஹம்களுக்கு, அதாவது ரூ.922 கோடிக்கு விற்பனையானது. ஜுமேரா பே தீவில் அமைந்துள்ள இந்த அபார்ட்மென்ட், தரமான கட்டிடக்கலை மற்றும் சர்வீஸ்களுக்கு பெயர் பெற்றது. ஒன்பது படுக்கையறைகள், ஏழு குளியலறைகள் மற்றும் ஒரு பிரைவேட் இன்ஃபினிட்டி குளத்தை இது பெற்றுள்ளது.
5வது இடம்
ஐந்தாவது இடத்தை 'ஒன் அட் பாம் ஜுமேரா பென்ட்ஹவுஸ்' பிடித்துள்ளது. இது 2024 செப்டம்பரில் 275 மில்லியன் திர்ஹம்களுக்கு, அதாவது அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.626 விற்பனை செய்யப்பட்டது. ஓம்னியட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த வீடு, துபாயின் நவீன கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாகும். அதிநவீன வடிவமைப்புடன், அவுட்டூர் நீச்சல் குளம், பிரைவேட் தியேட்டர், ஸ்பா என ஏகப்பட்ட வசதிகளை இது கொண்டு இருந்தது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications