Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்வினை டார்கெட் செய்த கும்பல்- லார்ட்சுக்கு வெளியில் என்ன பண்ணுனீங்க சொல்லுங்க? கோபமாக சீரிய சேவாக்

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை சர்வதேச ஊடகங்கள் பல மீண்டும் டார்கெட் செய்ய தொடங்கி உள்ளன. அஸ்வின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நடந்து கொண்ட விதம் காரணமாக இப்படி டார்கெட் செய்யப்படுகிறார்.

Recommended Video

    Ashwin thunders! Explains about his fight with Morgan | IPL 2021 DC vs KKR | OneIndia Tamil

    டெல்லி அணியில் ஆடி வரும் அஸ்வின் இதற்கு முன் பஞ்சாப் அணியில் இருந்த போதே மன் கட் விக்கெட் எடுத்த காரணத்தால் விமர்சனங்களை சந்தித்தவர். இவர் புகழின் உச்சியில் இருந்தாலும் சர்வதேச அளவில், இவரின் கோபம் மற்றும் ஆக்ரோஷம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வருபவர்.

    ஏன் டீம் மீட்டிங்கில் கூட அஸ்வின் கோபமாக பேசுகிறார், மற்றவர்களை பற்றி தவறாக பேசுகிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்.. உங்கள் அணியிலேயே உங்களை யாருக்கும் பிடிக்காதாமே உண்மையா? என்று கேட்டார்.

    அஸ்வின்

    அஸ்வின்

    ஆம் அஸ்வினை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் விரும்புவது இல்லை என்றே கூறப்படுகிறது. ஏன் கேப்டன் கோலியும் கூட அஸ்வினை ஒருநாள் டி 20 அணிகளில் இருந்து தூக்குவதற்கு அவரின் குணமும், அணி மீட்டிங்கில் பேசிய சில விஷயங்களும்தான் காரணம் என்று கூறப்பட்டது. அந்த அளவிற்கு அஸ்வினின் மீது இந்திய அணிக்கு உள்ளேயே சிலர் கோபமாக இருப்பதாக அவ்வப்போது கூறப்படுவது உண்டு. ஆனால் அஸ்வினோ யூ டியூபில் ஜாலியாக பேசுவது, ட்வீட்டரில் கிண்டலாக கமெண்ட் செய்வது என்று மிகவும் ஜாலியாகவே இதுவரை இருந்துள்ளார்.

     மீண்டும் சர்ச்சை

    மீண்டும் சர்ச்சை

    இந்த நிலையில்தான் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இயான் மோர்கனுடன் அஸ்வின் மோதியது மீண்டும் சர்ச்சசையாகி உள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்த போது வெங்கடேஷ் வீசிய டெத் ஓவர்களில், பண்ட் ஒரு ரன் அடித்துவிட்டு ஓடினார். அதன்பின் திரிபாதி பந்தை தடுத்து அதை தூக்கி வீசிய போது, பந்து பண்ட் உடலில் பட்டு எதிர் திசையில் சென்றது. இதை பயன்படுத்தி அஸ்வின் இன்னொரு ரன் ஓட கூப்பிட்டார். பண்ட்டும் அஸ்வின் சொன்னதை கேட்டு இரண்டாவது ரன் ஓடினார்.

     கோபம்

    கோபம்

    இதைத்தான் இயான் மோர்கன் எதிர்த்தார். ஒரு ரன் ஓடிவிட்டீர்கள். அதன்பின் உடலில் பட்டு ரன் ஓடுவது கிரிக்கெட் ஆன்மாவிற்கு எதிரானது. இப்படி எல்லாம் செய்ய கூடாது என்று மோர்கன் அஸ்வினிடம் வம்பிழுத்து இருக்கிறார். இதற்காக கோபத்தின் உச்சிக்கே சென்ற அஸ்வின், இயான் மோர்கனிடம் கண்டபடி பேசி சண்டை போட்டுள்ளார். அடுத்த ஓவரில் சண்டை நீண்டது. அதேபோல் இடையில் கோச் பாண்டிங் வந்து பேசும் அளவிற்கு சண்டை நீண்டது.

    சர்வதேச மீடியா

    சர்வதேச மீடியா

    இந்த சாதாரண சம்பவம்.. மற்ற கிரிக்கெட் மோதல்களை போல கடந்து போக கூடிய ஒன்றுதான். ஆனால் அஸ்வின் என்றதும் இதை சர்வதேச மீடியாக்கள் பெரிதுபடுத்திவிட்டது. சர்வதேச கிரிக்கெட் மீடியாக்கள் பலர் அஸ்வினை மிக மோசமாக விமர்சனம் செய்து இது தொடர்பாக கட்டுரைகளை எழுதி உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள், ஷேன் வார்னே போன்ற வீரர்கள் பலர் அஸ்வினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

    அஸ்வினை டார்கெட்

    அஸ்வினை டார்கெட்

    அஸ்வின் எதிலாவது மாட்ட மாட்டாரா என்று காத்திருந்தது போல அவருக்கு எதிராக பலர் கடுமையாக விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இயான் மோர்கன் விக்கெட் எடுத்த பின் அஸ்வின் கோபம் அடைந்ததையும் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதே விஷயத்தை தோனியோ, கோலியோ செய்து இருந்தால், அது ஹீரோயிசம் போல காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அஸ்வின் என்பதால் இது அக்ரஷன் என்று இல்லாமல் வீண் கோபம் என்று விமர்சிக்கப்படுகிறது.

    சேவாக்

    சேவாக்

    இந்த நிலையில்தான் சேவாக் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். உடலில் பந்து பட்டு ரன் ஓடியதை மார்கன் விரும்பவில்லை என்ற செய்தியை வெளியிட்டு சேவாக் ட்வீட் செய்துள்ளார். அதில், 2019 ஜூலை 14 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஓடிய போது அவரின் பேட்டில் பட்டு ஓவர் த்ரோ பவுண்டரி சென்றதே.. அப்போது மார்க் லார்ட்ஸ் மைதானத்திற்கு வெளியே என்ன செய்து கொண்டு இருந்தார்? உலகக் கோப்பையை வாங்க மாட்டேன் என்று அவர் தர்ணா செய்தாரா? ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பற்றி நீங்கள் பேசலாமா என்பது போல சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அஸ்வினுக்கு சேவாக் உள்ளிட்ட சில வீரர்கள் மட்டுமே ஆதரவாக பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+