துபாயில் இந்திய மிடில் கிளாஸ் மக்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ரொம்பவே ஈஸி தான்.. மிஸ் பண்ண வேண்டாம்
துபாய்: ஐக்கிய அமீரகத்தில் இந்தியக் கோடீஸ்வரர்களே இத்தனை காலம் முதலீடு செய்து வந்த சூழலில், இப்போது அங்கு நிலைமை மாறியிருக்கிறது. இந்தியர்கள் குறிப்பாக மிடில் கிளாஸ் இந்தியர்கள் துபாயில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. திடீரென இப்படி டிரெண்ட் மாற என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்குரிய ஆடம்பர மையமாக இருந்த துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் இப்போது முற்றிலும் மாறுபட்ட முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு மிடில் கிளாஸ் இந்தியர்கள் முதலீடு செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த திடீர் மாற்றமே இப்போது துபாய் ரியல் எஸ்டேட் சந்தையைக் கவனிக்க வைக்கும் ஒன்றாக மாற்றியுள்ளது.

துபாய் முதலீடுகள்
அதேநேரம் இந்த முதலீடு ஆடம்பரம் பற்றியது இல்லை. வருவாயையும் பாதுகாப்பையுமே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஏனென்றால் இந்திய மெட்ரோ நகரங்களில் வீட்டுக் கடன்கள் 9-10% வட்டிக்குக் கிடைக்கும். அதேநேரம் வாடகை வருவாய் வெறும் 3%ஐ மட்டுமே இருக்கும். உதாரணமாக, ₹2 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கினால் மாதத்திற்கு ₹50,000 மட்டுமே வாடகையாகக் கிடைக்கும். இது பார்க்கக் கணிசமான தொகை போலத் தெரிந்தாலும், இஎம்ஐ கட்ட கூட இது போதுமானதாக இருக்காது.
வருவாய் அதிகம்
மாறாக, துபாயில் இதே ₹2 கோடிக்கு (சுமார் 8,30,000 திர்ஹம்) ஜுமேரா வில்லேஜ் சர்க்கிள் அல்லது துபாய் சவுத் போன்ற பகுதிகளில் ஒரு படுக்கையறை அப்பார்ட்மென்ட்டை வாங்கலாம். அங்கு வாடகை வருவாய் சராசரியாக 7-9% கிடைக்கிறது. ஒரு மில்லியன் திர்ஹம் (₹2.4 கோடி) மதிப்புள்ள சொத்து, மாதத்திற்கு ₹7,500 திர்ஹம் (₹1.8 லட்சம்) வரை வாடகை கிடைக்கிறதாம். அதாவது 9% வரை வருமானம் கிடைக்கிறது. வீட்டுக் கடனும் அங்கு 5% முதலே கிடைக்கிறது. இதனால் கணிசமான தொகை கையில் நிற்கும்.
அங்குள்ள கட்டுமான நிறுவனங்கள் இந்தியர்கள் முதலீட்டை ஈர்க்க மேலும் பல திட்டங்களை வழங்குகின்றன. முதலில் 20% முன்பணம் செலுத்திவிட்டு, மீதியை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் செலுத்தலாம். இது முழு பெரிய தொகை கையில் இல்லை என்றாலும் மிடில் கிளாஸ் மக்களுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பைத் தருகிறது.
வரி இல்லை
அங்குள்ள இதர விஷயங்களும் கூட இந்திய மிடில் கிளாஸை ஈர்க்கிறது. அங்கு வாடகை வருமானத்திற்கு வரி இல்லை; ஆண்டுச் சொத்து வரியோ, மூலதன ஆதாய வரியோ கிடையாது. இந்திய நகரங்களில் வழக்கமாக உள்ள 6-7% முத்திரைக் கட்டணம் இருக்கும் நிலையில், அங்கு 4% மட்டுமே துபாய் நிலத் துறை பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் ஒரு முறை செலுத்தினாலே போதும்.
துபாயில் இந்திய மிடில் கிளாஸ் முதலீடுகள் அதிகரித்து வருவதையே டேட்டாவும் காட்டுகிறது. 2024ல் துபாயில் நடைபெற்ற ஒட்டுமொத்தச் சொத்து பரிவர்த்தனைகளிலும் இந்தியர்கள் 22% பங்கு வகித்துள்ளனர். அவர்கள் சுமார் 35 பில்லியன் திர்ஹம் (₹84,000 கோடி) முதலீடு செய்துள்ளனர். இப்போது துபாயில் உள்ள சுமார் 40,000 வீடுகள் இந்தியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கிறது.
அதிகரிக்கும் தேவை
அங்கு வசிக்கும் மக்கள் தொகை அதிகரிப்பதால் வாடகை வீட்டிற்கான தேவையும் அதிகரிக்கிறது.. இதன் காரணமாகவே இந்தியாவில் 3 முதல் 5%ஆக இருக்கும் வாடகை வருவாய், அங்கு 7 முதல் 11%ஆக உள்ளது. அங்கு மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வீடுகள் தேவை அதிகரித்து வாடகை தேவையும் கூட உயரவே செய்யும்.
கோல்டன் விசா
அதேபோல துபாயின் கோல்டன் விசா திட்டம் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். துபாயில் 2 மில்லியன் திர்ஹம் (₹4.8 கோடி) மதிப்பிலான சொத்தை வாங்கினால் ஐந்து அல்லது பத்து ஆண்டு குடியிருப்பு அனுமதி கிடைக்கிறது. இந்த கோல்டன் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களில் இந்தியர்கள்தான் அதிகம்.. இது அங்கு நீண்ட காலம் தங்குவதற்கான வாய்ப்பைத் தருவதோடு துபாயின் கல்வி, சுகாதார சேவைகளை அணுகும் வாய்ப்பையும் தருகிறது.
அதேநேரம் இதில் சட்டப்படியும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. LRS வரம்பு, TCS, சர்வீஸ் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் உள்ளன. இதையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். இப்படி சில பல சிக்கல்கள் இருந்தாலும் கூட துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் இந்தியர்களை ஈர்க்கும் விஷயமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
-
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?











Click it and Unblock the Notifications