கஷ்டமா இருக்கு.. பண்ட் ஸ்டைலில் கேன் அடித்த அந்த "ஒற்றை கை" சிக்ஸ்.. பின்னணியில் சோக கதை!

Subscribe to Oneindia Tamil

துபாய்: நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2021 உலகக் கோப்பை டி 20 இறுதிப்போட்டி நடந்து வருகிறது.

முதல்முறை இரண்டு அணிகளும் டி 20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் நேருக்கு நேர் ஆடுகின்றன. இரண்டு அணிகளும் இதுவரை உலகக் கோப்பை டி 20 தொடரில் வென்றது இல்லை என்பதால் இன்றைய போட்டி முக்கிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

இதில் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியா வசம் இருந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா நினைத்தபடியே பவுலிங் தேர்வு செய்தது.

துபாய்

துபாய்

துபாய் பிட்சில் சேசிங் செய்வது மிக எளிது. இங்கு சேசிங் செய்து ஒரே ஒரு அணிதான் இதுவரை வீழ்ந்து இருக்கிறது. அது 2021 ஐபிஎல் தொடரின் பைனலில் சிஎஸ்கேவிடம் கொல்கத்தா வீழ்ந்த போட்டி. சிஎஸ்கே மட்டுமே இங்கு முதலில் பேட்டிங் செய்து வென்றுள்ளது. இதனால் புள்ளி விவர ரீதியாக ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கமே இருந்தது.

தொடக்கம்

தொடக்கம்

அதேபோல் முதல் 10 ஓவர்களும் ஆஸ்திரேலியா வசம்தான் இருந்தது.முதல் 10 ஓவர் முடிவில் நியூசிலாந்து வெறும் 76-1 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. குப்தில், கேன் இருவரும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். இதன் பின் ஆட்டத்தை மொத்தமாக ஆஸ்திரேலியாதான் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 கியர் மாற்றினார்

கியர் மாற்றினார்

ஆனால் அதன்பின்தான் கேன் வில்லியம்சன் கியரை மாற்றினார். 12 ஓவர்கள் வரை ஆட்டம் மெதுவாக சென்றது. 13வது ஓவரில் திடீரென வேகம் எடுத்த கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார். இரண்டு ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் ஆடும் போது மேக்ஸ்வெல்லை களமிறக்கி பின்ச் ரிஸ்க் எடுத்தார். சிக்ஸ் சென்றாலும் விக்கெட் விழும் என்று நம்பி மேக்ஸ்வெல்லுக்கு பின்ச் ஓவர் கொடுத்தார்.

ஆனால் சிக்ஸ்

ஆனால் சிக்ஸ்

ஆனால் அந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து வில்லியம்சன் ஆட்டத்தை மாற்றினார். அதிலும் முதல் சிக்சை இடதுகையை வைத்து மட்டும் அடித்தார். பொதுவாக பண்ட்தான் இப்படி ஒற்றை கை சிக்ஸ் அடிப்பார். அதை அப்படியே இன்று வலதுகை பேட்ஸ்மேனான கேன் துபாயில் செய்து காட்டினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் வில்லியம்சன் இடது கையில் ஒற்றை கை சிக்ஸ் அடித்தார்.

 அவதி

அவதி

இந்த கையில் கடந்த இரண்டு மாதமாக காயம் காரணமாக வில்லியம்சன் அவதிப்பட்டு வருகிறார். அதிலும் இந்த தொடருக்கு முன்பாக இந்த கையில் காயம் மோசமானது. எனக்கு காயம் மோசமாக இருக்கிறது. நான் முதுகு பிரச்சனை சரியாகிவிட்டது என்று நிம்மதியாக இருந்த போது இந்த காயம் மோசமாகி உள்ளது. எனது கையில் இருக்கும் காயத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

காயம் விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் என்று வில்லியம்சன் குறிப்பிட்டு இருந்தார். அந்த கையில்தான் தற்போது வில்லியம்சன் சிக்ஸ் அடித்தார். இதில் வில்லியம்சன் ஆடிய முதல் 19 பந்தில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த 20 பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று 50 ரன்கள் எடுத்தார். அந்த அளவிற்கு ஆட்டத்தில் இவர் வேகம் எடுத்தார். 48 பந்தில் 85 ரன்கள் எடுத்து வில்லியம்சன் அவுட் ஆனார். இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+