அடச்சே.. மேட்ச் ஜெயிச்சதும் ஆஸி. வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ!
துபாய்: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் வென்ற பின் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் அதை கொண்டாடிய விதம் வைரலாகி உள்ளது.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தொடங்கிய டி 20 உலகக் கோப்பை 2021 தொடர் நேற்றோடு முடிவிற்கு வந்தது. இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற பல அணிகள் இந்த தொடரில் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்து 5 டி 20 தொடர்களில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அதிசயமாக உலகக் கோப்பை டி 20 தொடரை வென்றுள்ளது.

வெற்றி
ஆஸ்திரேலிய அணியை விட பேட்டிங், பவுலிங்கில் நியூசிலாந்து வலிமையான அணியாக இருந்தும் கூட இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 2015 உலகக் கோப்பை 50 ஓவரில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த நியூசிலாந்து மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் டி 20 பைனலில் வீழ்ந்து உள்ளது. நேற்று டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சிறப்பாக ஆடி 172/4 ரன்கள் எடுத்தது.

கண்ணீர்
அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் எளிதாக 173-2 ரன்கள் எடுத்து வென்றது. வரிசையாக 5 டி 20 தொடர்களில் தோல்வி. இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் தோல்வி என்று பல காரணங்களால் நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் களத்திலேயே கண்ணீர்விட்டனர். வரிசையாக பல போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இந்த உலகக் கோப்பை வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

ஆட்டம்
போட்டிக்கு பின்பாக டிரெஸ்ஸிங் ரூமில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். வரிசையாக பல ஆங்கில பாடல்களை ஓடவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் சாம்பா, வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் பொதுவாகவே கொண்டாட்டமான வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீர்
பல வீரர்கள் கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு பிற வீரர்கள் மீது பீச்சி அடித்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில்தான் ஆஸி வீரர்கள் மேத்யூ வேட் தனது ஷூவை கழற்றி அதில் பியரை ஊற்றி குடித்தார். ஆட்டத்தில் பயன்படுத்திய அதே வியர்வை கொண்ட ஷூவில் பியரை ஊற்றி மேத்யூ வேட் குடித்தார். இவரை தொடர்ந்து ஸ்டோனிசும் இதேபோல் தன்னுடைய ஷூவை கழற்றி அதில் பியரை ஊற்றி குடித்தார்.
|
வைரல்
இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. கொண்டாடலாம் சரி.. இது என்ன இப்படி செய்கிறார்கள். அட ச்சே கொரோனா காலத்தில் இப்படி ஷூவில் பியரை ஊற்றி கொண்டாடலாமா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த ஷூவில் அவ்வளவு வியர்வை இருக்குமே என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வியர்வை
இந்த கொண்டாட்டத்தை இதற்கு முன் டேனியல் ரிக்கார்டோ செய்து இருக்கிறார். இவர் பிரபல பார்முலா 1 ரேசர். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். இவர் ஒவ்வொருமுறை கோப்பை வெல்லும் போதும் தனது ஷூவில் பெயரை ஊற்றி குடிப்பது வழக்கம். இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் இப்போது செய்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications