வாவ்.. 196 அடி ஆழம்.. மூழ்கிய குட்டிநகரம் மாதிரி அமைப்பு.. கின்னஸ் சாதனை படைத்த துபாய் நீச்சல்குளம்!
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது.
துபாய் : துபாயில் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள வசதிகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
நீச்சல் குளம் என்றாலே எல்லோர் மனதிலும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு அலாதியான சுகத்தை தரக் கூடியது தண்ணீரில் நீந்திக் கடப்பது. அதிலும் 196 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் பலவகையான விஷயங்களை ரசித்துக் கொண்டே நீச்சல் அடிப்பது என்றால் கேட்கவா வேண்டும்... அப்படி ஒரு ஆனந்தத்தை தருவதற்காகத்தான் துபாயின் டீப் டைவ் நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாத் அல் செபா பகுதியில் டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது.

கொள்ளளவு
இந்த நீச்சல்குளத்தின் ஆழம் 196 அடியாகும். அதாவது 60 மீட்டர் ஆழம். அதாவது இதன் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் போட்டி அளவிற்கான நீச்சல் குளங்களுக்குச் சமம். இந்த நீச்சல் குளத்தை நிரப்ப தேவைப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டராம்.

அண்டர்வாட்டர் சுற்றுலாதளம்
இது வெறும் நீச்சல் குளமாக மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட ஒரு அண்டர் வாட்டர் சுற்றுலா தளம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை இதில் ஏற்படுத்தி உள்ளனர். அந்த பகுதிக்கு ஹப்பர் பேரிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

56 கேமராக்கள்
இந்த நீச்சல் குளமானது 20 அடி மற்றும் 69 அடி ஆழத்தில் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டைப் போலவே, இந்த நீச்சல்குளத்திலும் ஆங்காங்கே என மொத்தம் 56 கேமராக்கள் நீருக்கடியில் உள்ளன. அவை குளத்தின் அனைத்து கோணங்களையும் படம் பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்னூக்கர்
அதேபோல் சூழ்நிலைக்கேற்ப வண்ணங்கள் மற்றும் ஒளி அளவை வெளிப்படுத்தும் 164 மின் விளக்குகள் ஆழமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நூலகம், ஸ்னூக்கர் விளையாடுவதற்கான இடம் பழைய பணிமனை, ஸ்கூபா டைவ் வீரர்களுக்கான பயிற்சி எனப் பல்வேறு வசதிகளும் இதில் செய்து தரப்பட்டுள்ளது.

ஸ்கூபா டைவிங் குழு
குறிப்பாக ஸ்கூபா டைவிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ சர்வதேச டைவிங் நிபுணர்களின் குழுவும் அங்கு உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்வர்கள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வசதி செய்துதரப்பட்டுள்ளது. இதற்காக இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது.

உணவக வசதி
ஒரே சமயத்தில், நீரின் அடியில் சுமார் 100 நபர்கள் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் வசதியும் இருக்கிறது. 80 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான உணவகம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே வித்தியாச விரும்பிகள் இங்கு சென்று உணவும் அருந்தலாம், நிகழ்ச்சிகளும் நடத்தலாம்.

நவீன தொழில்நுட்பம்
குளத்தின் நீர் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருமுறை நாசாவால் உருவாக்கப்பட்ட எரிமலை பாறைகள் வடிகட்டி தொழில்நுட்பம் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு மூலம் சுத்தபடுத்தப்படுகிறது. இதனால் நீரின் தூய்மைத்தன்மையைப் பற்றி சுற்றுலா வருபவர்கள் அச்சப்படத் தேவையில்லை.

கின்னஸ் சாதனை
உலகிலேயே ஆழமான நீச்சல் குளம் என்பதை கின்னஸ் சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் முத்து குளித்தல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட நீச்சல் குளத்தை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
|
வைரல் வீடியோ
நீச்சல் குளத்தின் வீடியோவையும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் உள்ள காட்சிகளைப் பார்த்து இணையவாசிகள் பிரமித்துப் போய்விட்டனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications