உலகின் ஒரே 10 ஸ்டார் ஹோட்டல்.. ஒரு நாள் தங்குவதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? அதிர்ந்து போவீங்க

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகின் ஒரே 10 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் என்று குறிப்பிடப்படுவது ஜுமேரா புர்ஜ் அல் அரப் ஹோட்டல். அதிகாரப்பூர்வமாக 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்த ஹோட்டல் பாய்மர வடிவத்தில் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கான கட்டணம் மட்டும் தெரிந்தால் வாயடைத்து போவீர்கள்.. கட்டணம் எவ்வளவு? ஏன் இவ்வளவு காஸ்ட்லி என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

உலகின் ஒரே 10 நட்சத்திர ஹோட்டல் என்று அழைக்கப்படுவது ஜுமேரா புர்ஜ் அல்அரப். துபாயில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. துபாயில் ஏற்கனவே புர்ஜ் கலிஃபா போன்ற உயரமான கட்டிடங்கள் உள்ளன. 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அல்ட்ரா சொகுசு ஹோட்டலின் உயரம் 321 மீட்டர் ஆகும்.

dubai hotel world

இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு ஆகும் செலவு ரூ. 10 லட்சம் ஆகும். இந்த ஹோட்டல்களுக்கு வரும் விருந்தினர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்படுகிறார்கள். அப்படி 10 லட்சத்திற்கு இந்த ஹோட்டலில் என்னதான் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். இந்த ஹோட்டலில் தங்கும் கெஸ்ட்களுக்குபல சொகுசு வசதிகள் உள்ளன. பிரைவேட் பீச், நீச்சல் குளங்கள், ஸ்பா, தங்கபேசியல், டைமண்ட் மசாஜ் என எல்லாமே ஆடம்பர மயம்தான்.

ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார். இந்த உதவியாளர் 24 மணி நேரமும் உதவுவதற்கு தயாராக இருப்பார். இந்த ஹோட்டலில் 8:1 என்ற விகிதத்தில் ஊழியர்கள்
இருக்கிறார்களாம். அதாவது ஒரு விருந்தினருக்கு 8 ஊழியர்கள் இருப்பார்கள். ஏனெனில் ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் எந்த ஒரு இடையூறும் சந்திக்காமல் சகல வசதியுடன் இருப்பதற்கும் விருந்தினர்களை கூடுதல் கவனம் எடுத்து பராமரிக்கவும், இப்படி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

புர்ஜ் அல் அராப் மேல் தளம் மட்டும் 10 சதுர மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்த இடவசதி கொண்டது. கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருப்பதால் அலைகளுக்கு மேல் மிதப்பது போன்ற அனுபவத்தை விசிட்டர்களுக்கு இந்த ஹோட்டல்
கொடுக்கும். இந்த ஹோட்டலில் எட்டு உலகத்தரம் வாய்ந்த உணவு விடுதிகளும் உள்ளன. இந்த உணவு விடுதிகளில் நேர்த்தியான உணவுகள், புதுமையான உணவுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஹோட்டலில் நீருக்கடியில் செயல்படும் உணவு விடுதி ஒன்றும் உள்ளது. இந்த உணவு விடுதியில் விருந்தினர்கள், கடல் வாழ் உயிரினங்களை வியந்து பார்த்துக்கொண்டே சுவையான உணவு பாதார்த்தங்களை உண்ணலாம். கடல் வாழ் உயிரினங்களை பார்க்க வசதியாக பிரம்மாண்ட கண்ணாடி ஜன்னல்களும் அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+