புது லோகோ! புது அடையாளம்! புதுப்பொலிவுடன் உங்கள் ஒன்இந்தியா! நீண்ட பயணத்தின் மற்றொரு மைல்கல்
சென்னை: இந்தியாவின் முன்னணி செய்தித்தளமான "ஒன்இந்தியா" தற்போது புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. "ஒன்இந்தியா" ஊடக குழுமத்தின் புதிய குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த, வெளிப்படையான, எல்லைகளுக்குள் நிற்காத, இந்தியாவை வெளிக்காட்டும் விதமாக இந்த மாபெரும் "rebranding" மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஒரு வலுவான அடித்தளம்: ஒன்றுபட்ட, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, வெளிப்படையான "ஒன்இந்தியா."

எங்களின் இந்த புதிய அடையாளம், ஊடக உலகில் ஒரே ஒரு "ஒன்இந்தியாதான்" உள்ளது என்பதை தோளை உயர்த்தி சொல்லும் விதமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெறும் தோற்றத்தில் மட்டும் மாற்றம் செய்யாமல், எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வந்து, வந்த வழியை மறக்காமல், அதே சமயம் புதுமைகளை புகுந்தும் விதமாக மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். எண்ணற்ற வாய்ப்புகள், திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக, ஒவ்வொரு இந்தியனும் பயனடையும் விதமாக இந்த மாற்றங்களை மேற்கொண்டு உள்ளோம்.
ஒரு நீண்ட பயணம்! 1999 இல் Indiainfo.com என தொடங்கப்பட்ட "ஒன்இந்தியா" தொடக்கத்தில் அப்போதைய Gen-X மக்களின் கவனத்தை ஈர்த்தது. அப்போது தொடங்கிய பயணம் தற்போது Gen-Z இளசுகளையும் கவர்ந்து, அதற்கு அப்பாலும் செல்லும் வகையில் கடந்த 25 வருடங்களாக மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த வரலாற்றுப் பயணம் சாதாரணமானது அல்ல. பல்வேறுபட்ட வாசகர்களின் மாறிவரும் தேவைகளை, விருப்பங்களை பூர்த்தி செய்து "ஒன்இந்தியா" தொடர்ந்து அவர்களின் விருப்பமான ஆன்லைன் ஊடகமாக திகழ்ந்து வருகிறது. "ஒன்இந்தியாவின்" அளப்பரிய ஊடக அர்ப்பணிப்பை இந்த நீண்ட பயணம் பிரதிபலிக்கிறது.
ஒன்இந்தியா என்னும் பிராண்ட் அளிக்கும் வாக்குறுதி: "ஒன்இந்தியாவின்" அர்ப்பணிப்பு என்பது அதன் சிறந்த, உண்மையான, நேர்மையான, உடனுக்குடன் வெளியாகும் உணர்வுபூர்வமான செய்திகளில் இருக்கிறது. தங்களின் அறிவு, அனுபவம் மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதற்கான தேடலில் இருக்கும் வாசகர்களுக்கு, கண்டிப்பாக "ஒன்இந்தியாவின்" இந்த புதுமை, புதிய உற்சாகத்தை அளிக்கும். எங்கள் பலதரப்பட்ட வாசகர்களின் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்றவாறு எங்களின் தளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் விருப்பங்களை தேவைகளை எல்லாவற்றையும்விட மேலாக கருதி, வெப் தளத்தில் மாற்றங்களை செய்துள்ளோம். எங்களுடன் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து பயணிக்கும் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தை Oneindia உறுதி செய்கிறது.
ஒன்இந்தியாவின் புதிய லோகோவை அறிமுகப்படுத்துகிறோம்: "ஒன்இந்தியாவின்" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட லோகோவை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். பல மொழிகளில் செயல்படும் "ஒன்இந்தியா" ஊடகத்தை பிரதிபலிக்கும் விதமாக, எங்களின் ஆற்றலை, ஊடக நேர்மையை, மக்களுடன் உள்ள பிணைப்பை குறிக்கும் வகையில் எங்களின் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளது. "ஒன்இந்தியாவின்" ஆளுமை, 25 ஆண்டுகால மதிப்பு மற்றும் பிராண்ட் நோக்கம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இந்த ரீ பிராண்டிங் செய்யப்பட்டு உள்ளது. தனித்துவமான டிசைனில் , மாடர்ன் தோற்றத்தில், மக்களிடம் எளிதாக சென்று சேரும் விதமாக, பளிச்சிடும் வண்ணத்தில் எங்களின் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஒன்இந்தியா என்னும் பன்மொழி ஊடகம்: Oneindia இந்தியாவின் முன்னணி செய்தி தளமாக உள்ளது, நீங்கள் விரும்பும் மொழியில் ஈர்க்கக்கூடிய செய்திகளை பல பிரிவுகளில் வழங்குகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் செயல்படும் Oneindia.. பெயருக்கு ஏற்றபடி மொத்த இந்தியாவில் உள்ள எல்லா பார்வையாளர்களின் பல்வேறு மொழி விருப்பங்களுக்கு ஏற்றபடி செய்திகளை வழங்குகிறது.
ஊடகத்துறையில் பிரம்மாண்ட ரீச் மற்றும் செல்வாக்கு: 200 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர தனிப்பட்ட வாசகர்களுடன் (பயனர்களுடன்), "ஒன்இந்தியா" இப்போது ஊடகங்களிடையே, நம்பர் 1 ஆக உள்ளது. இந்தியாவில் உள்ள 5 இணையபயன்பாட்டாளர்களில் ஒருவர் நம்முடைய பயனாளர் என்பதில் பெருமை கொள்கிறோம். நாட்டில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 25% பேர் "ஒன்இந்தியா" குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த புள்ளி விவரம் ஒன்இந்தியாவின் மாபெரும் செல்வாக்கையும், டிஜிட்டல் வெளியில் எங்களின் முக்கிய பங்களிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விளம்பரதாரர்களுக்கான தனித்துவமான வாய்ப்பு: வாருங்கள்.. மறுவடிவமைக்கப்பட்ட Oneindia-வின் புதிய உலகத்தைக் கண்டறியலாம். செய்திகளை பகிர்வது மட்டுமின்றி.. நாங்கள் பயனர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையே நன்மை பயக்கும் உறவையும் உருவாக்கி வருகிறோம். இரண்டு தரப்பிற்கு நல்ல இணக்கமான உறவை.. விளம்பரதாரர்கள் எங்களின் பல கோடி வாசகர்களிடம் எளிதாக சென்று சேரும் வாய்ப்பை, நாங்கள் உருவாக்கி தருகிறோம். முக்கியமாக எங்களின் "ரீ பிராண்டிங்", பயனர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் இடையே இன்னும் இணக்கத்தை அதிகப்படுத்துகிறது.
ஒன்இந்தியாவின் ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ்- எங்களின் ஊடக பிரிவுகள்!
ஒன்இந்தியா பல்வேறு சிறப்பு போர்ட்டல்களுக்கு தாயகமாக உள்ளது. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட துறையில் அசத்தலான செய்திகளை, தகவல்களை, கட்டுரைகளை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
FilmiBeat: பொழுதுபோக்கு
Drivespark: வாகனம்
Good returns: நிதி
MyKhel: விளையாட்டு
Gizbot: தொழில்நுட்பம்
Native Planet: பயணம்
Boldsky: வாழ்க்கை முறை
Career India: கல்வி
HitzFeed: வைரல் செய்திகள்
பல்வேறு வகைகளில் மதிப்புமிக்க மற்றும் ஈர்க்கக்கூடிய கன்டென்ட்களை, வழங்குவதில் எங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன.
முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு: இந்த "ரீ பிராண்டிங்" " ஒன்இந்தியாவின்" பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்து உள்ளது. மேலும் இது நேர்மறையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழிவகுக்கும். எங்கள் பயனர்களுடன், வாசகர்களுடன் மேலும் இணைப்பை ஏற்படுத்தும்.
ஒன்இந்தியா பற்றி!
Oneindia என்பது விரிவான செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் மதிப்புமிக்க கட்டுரைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நாட்டின் முதன்மையான டிஜிட்டல் மீடியா தளமாகும். ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் எல்லையற்ற வாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒன்இந்தியா டிஜிட்டல் துறையில் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications