கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் கூட்டாளி சைமன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

1993ஆம் ஆண்டு கர்நாடகாவில் வீரப்பன் கூட்டாளிகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பெங்களூரு சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார் சைமன்.

Veerapan friend Simon died in Karnataka jail

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சைமன் உயிரிழந்து விட்டதாக கர்நாடக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Veerapan friend Simon died in Karnataka jail. Simon have been locked up in the jail for killing 22 police in Karnataka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற