Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. 2019-ஐ பதற வைத்த கொலை!

55 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலால் நடந்த கொலை மறக்க முடியாத ஒன்றாகும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: 55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு கள்ளக்காதல் தேவைதானா? வெறும் 7500 ரூபாய் கடனுக்காக தேவியின் கழுத்தை நெறித்து கொலையே செய்துவிட்டார் இளைஞர்!! யாராக இருந்தாலும் சரி.. முறையற்ற உறவுமுறைகள் இருந்தால்.. இந்த கதிதான் ஏற்படும் என்பதை இந்த வருடமும் நிரூபித்த சம்பவம்தான் இந்த கள்ளக்காதலும், அதனையொட்டி நடந்த கொலையும்!

ஜூலை மாத இறுதியில் நடந்த சம்பவம் இது: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் தேவி. வயசு 55. கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டணத்தை சேர்ந்தவர்.

சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தார். இவரது கணவர் பெயர் சுரேஷ். லாரி கிளினராக உள்ளார். அடிக்கடி வேலைக்கு லாரியில் வெளி மாநிலத்துக்கு இவர் போய் விடுவார்.

கிரைம் செய்திகள் 2019

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம்

அதனால் தேவி பெரும்பாலும் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். இந்நிலையில், ஒருநாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தேவி சடலமாக கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் சொல்லவும் விசாரணை ஆரம்பமானது.

ராமகிருஷ்ணன்

ராமகிருஷ்ணன்

இதுதொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். தேவி சடலத்துக்கு பக்கத்தில் ஒரு காலி மது பாட்டில் கிடந்தது. அப்போதுதான் ராமகிருஷ்ணன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது எல்லா உண்மையும் வந்தது.

கள்ள உறவு

கள்ள உறவு

55 வயசு தேவியுடன் ராமகிருஷ்ணன் என்ற 30 வயது இளைஞனுக்கு கள்ள உறவு இருந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் கரும்பு வெட்டும் வேலை பார்ப்பவராம். இவர்களுக்குள் பண விஷயத்திலும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் தேவி இவரிடம் ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். சம்பவத்தன்று இருவரும் தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருந்துள்ளனர்.

கொலை

கொலை

அந்த சமயத்தில், கொடுத்த 7500 ரூபாய் கடனை ராமகிருஷ்ணன் கேட்க, பணம் இல்லை என்று தேவி சொல்ல.. இது வாக்குவாதமாக மாறி உள்ளது. பிறகுதான் ஆத்திரத்தில் ராமகிருஷ்ணன் அரிவாளால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+