ஈரோட்டில் வெறும் 4 பேர் வேலை செய்த கம்பெனி.. சம்பளம் மட்டும் 390 கோடி.. தட்டி தூக்கிய அமலாக்கத்துறை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: விவசாய விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு பல கோடி ரூபாயை ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய 'யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் மோசடி செய்துள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ.719 கோடிக்கும் மேல் நிறுவனத்தின் உரிமையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர். இந்த மோசடி வழக்கில் 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய 'யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் செயல்பட்டுள்ளது. விவசாய விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு பல கோடி ரூபாயை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது. இதன் உரிமையாளர் நவீன் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களை நம்ப வைத்து மோசடி செய்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் கொடுத்தனர்.

A company in Erode with just 4 employees Salaries alone amounted to 390 crore

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அந்த நிறுவனம் தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தியது.

இதில் 'யூனிக் எக்ஸ்போர்ட்ஸ்' என்ற நிறுவனம் போலியானது என்பதும், இதன் மூலம் பல்வேறு முதலீட்டு திட்டங்களை உருவாக்கி, சுமார் 35,759 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.1,417.86 கோடி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் நவீன்குமார், அவரது கூட்டாளிகளில் ஒருவரான முத்துசெல்வம் ஆகிய 2 பேரை சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ.719 கோடிக்கும் மேல் நிறுவனத்தின் உரிமையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளின் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வழியாக மாற்றி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடத்திய போலி நிறுவனத்தில் 4 பேர் மட்டுமே பணியாற்றி வந்துள்ளார்கள். அவர்களுக்கு சம்பளமாக ரூ.390.90 கோடி வழங்கப்பட்டதாகவும், விவசாயப் பொருட்கள் எதுவும் வாங்காமல், ரூ.79.56 கோடிக்கு வெங்காயம் மற்றும் வணிகப் பொருட்கள் வாங்கியதாகவும் பொய்க் கணக்கு எழுதியும் நிதியை மறைத்துள்ளனர்.

கைதாகி உள்ள நவீன் குமார், இந்த மோசடித் திட்டங்களின் பின்னணியில் இருந்து வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீட்டாளர்களின் நிதியை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளார். அவரது கூட்டாளி முத்துசெல்வம், முதலீட்டாளர்களைத் திரட்டுவதிலும் நிதியைத் திருப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+