நாம் தமிழருக்குத்தான் வாக்களித்தேன்.. நம்பலையா இந்தாங்க வீடியோ.. பகீர் கிளப்பிய ஈரோடு வாக்காளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழருக்கு வாக்களித்த வீடியோவை வெளியிட்ட வாக்காளர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழருக்கு வாக்களித்த வீடியோவை சமூகவலைதளங்களில் முதல்முறையாக வாக்காளர் ஒருவர் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 70.58 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வாக்காளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

அமைதியான முறை
இதில் காலை முதலே மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வந்தனர். இந்த தேர்தலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தனி வரிசை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போதிலிருந்தே நாம் தமிழர் கட்சியின் பெயர் அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இந்த கட்சியின் வேட்பாளர் மேனகா வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் கொடுத்திருந்தார்.

அருந்ததியர்கள்
மேலும் அருந்ததியர்களை தேர்தல் பிரச்சாரத்தில் வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்ததாக அருந்ததியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சீமான் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து சீமான் பிரச்சாரம் செய்ய ஒரு பகுதியில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

திமுக - நாம் தமிழர் இடையே மோதல்
ஒரு கட்டத்தில் திமுக- நாம் தமிழர் கட்சி இடையே தாக்குதல் சம்பவமும அரங்கேறியது. சீமான் முந்தைய (அருந்ததியினர் குறித்து விமர்சிப்பதற்கு முன்னர்) பிரச்சாரத்தில் பாட்டு பாடி வாக்குகளை சேகரித்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்று சீமானே அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

முதல்முறை
முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்த நபர் ஒருவர் தான் வாக்களித்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் மொத்த் 77 வேட்பாளர்கள் இருந்ததால் நாம் தமிழர் கட்சிக்கு 22 ஆம் வரிசை எண் ஒதுக்கப்பட்டது. அதில் வேட்பாளரின் பெயர் மேனகா நவநீதன், அவருடைய புகைப்படம், கரும்பு விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

22 ஆவது இடத்தில்
அந்த நபர் முதல் வரிசையில் இருந்து தேடி அடுத்த வரிசைக்கு வருகிறார். அதில் 22 ஆவது இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் சின்னத்தில் எதிரே உள்ள பொத்தானை அழுத்துகிறார். உடனே அதில் விளக்கு எரிகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. எனினும் ட்விட்டரில் பதிவாகியிருந்த இந்த வீடியோ சில மணி நேரத்தில் டெலிட் செய்யப்பட்டுவிட்டது. பொதுவாக யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை கூட பொதுவெளியில் சொல்ல வேண்டியது அவசியமில்லாதது.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை
வாக்களிப்பது நமது உரிமை. அதற்கான வயதை எட்டிய நாம் பகுத்தறிந்து யாருக்கு அளிக்க விரும்புகிறோமோ அவருக்கு அளிக்க வேண்டும். ஒருவர் வாக்களிப்பதை யாரும் பார்க்கக்கூடாது என்பதால்தான் அது தனியுரிமை என்பதாலும் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுற்றி அட்டை பெட்டிகள் வைக்கப்பட்டு யாரும் பார்த்திராத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்த வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேல் காமெடி
இந்த சம்பவம் ஒரு சட்டவிரோத சம்பவம் என்றாலும் இதை பார்க்கும் போது வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் இருக்கிறது. தேர்தலில் வடிவேல் தென்னைமர சின்னத்தில் போட்டியிடுவார். அவரை எதிர்த்து ஏணி சின்னத்தில் ஒருவர் போட்டியிடுவார். அப்போது வடிவேல் தன்னுடன் இருப்போரிடம், பூத் சிலிப் கொடுத்துவிட்டால் மட்டும் பத்தாது, வோட்டு நமக்குத்தான் போட்டிருக்கானா என்பதையும் கன்பார்ம் செய்துகோங்க என்பார்.

ஏணி சின்னத்துக்கு ஒரு குத்து
அப்போது ஒருவரிடம் ஏணி சின்னத்தில் போட்டியிட்டவர் டேய் ஓட்டு எனக்குத்தானே போட்டே என கேட்பார். அதற்கு அவர் சத்தியமாக உனக்குதானே போட்டேன் என்பார். பிறகு வடிவேல் இருக்கும் இடத்தை தாண்டி வருவார். அப்போது வடிவேல் ஏய் நில்லு, யாருக்கு ஓட்டு போட்டே என கேட்பார். அதற்கு அவர் சத்தியமா உனக்குதான் போட்டேன் என்பார். அந்த ஆள் கிட்டயும் அவருக்குத்தான் போட்டேனு சொன்னியே இதில் எது உண்மை என வடிவேல் கேட்க அந்த நபர் இரண்டும் உண்மைதான்னே! அந்த ஆள்கிட்ட வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில் ஒரு குத்து, உன்கிட்ட வாங்கின காசுக்கு தென்னமர சின்னத்தில் ஒரு குத்து, ஆக மொத்தம் ரெண்டு குத்து என கூறுவார். அதற்கு மூன்றாவது குத்து நான் குத்தட்டுமா என கேட்டு வடிவேல் அந்த காமெடியனின் தலையில் ஓங்கி குத்துவார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications