கஞ்சா சாக்லேட்.. பாக்கெட் பாக்கெட்டாக சப்ளை.. ஈரோட்டில் இனிப்புக் கடை உரிமையாளர் கைது!
ஈரோடு: ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கடை உரிமையாளர் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் ஒருவர் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் இனிப்பு கடை ஒன்றில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த அந்தக் கடையின் உரிமையாளர் பஹதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பஹதூரிடம் இருந்து ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா சாக்லேட் விற்பனையின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications