தமாகாவே பரவாயில்ல.. பரிதாபகர நிலையில் அதிமுக! 2021 ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தோற்கடித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தோற்கடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 தேர்தலில் அந்த தொகுதி மக்களின் முடிவு என்னவாக இருந்தது என்பதை பார்ப்போம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று முட்ந்தது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து இறுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பெற்று இருக்கும் வாக்குகளுடன் ஒப்பிடும்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் 66575 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருமகன் ஈவேரா மரணம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை தேர்தல் ஆணையம் காலியானதாக அறிவித்து உள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
பிப்ரவரி 27 இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கே திமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் மீண்டும்போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனையே காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும் அறிவித்தது.

கே.எஸ். தென்னரசு
அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனை அதிமுக வேட்பாளராக அறிவித்து பின்னர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கை
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, தேமுதிக வேட்பாளராக ஆனந்த், ஆகியோர் வேட்பாளர்களாக இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களுடன் சேர்த்து இந்த தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களை கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. தீவிர தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி
இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி10,804- வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக கடந்த முறையை விட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 2021-சட்டமன்ற தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தது.

பின் தங்கிய அதிமுக
ஆனாலும் அதிமுக கடந்த முறையை விட இந்த இடைத்தேர்ததலில் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி வித்தியாசத்தை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதம் பெரிய அளவில் மாறவில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

2021 தேர்தல் முடிவுகள்
இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளர் திருமகன் ஈவேரா மொத்தம் 67,300 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அதிமுக கூட்டணி சார்பில் அந்த தேர்தலில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

தமாகவை விட மோசமா?
அந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்தது. அக்கட்சி வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகளை பெற்று இருந்தார். அடுத்ததாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜகுமார் 10,005 வாக்குகளை பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் வெறும் 1,204 ஓட்டுகளையே பெற்றார். ஆனால், நடப்பு தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்டால் தமிழ் மாநில காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியை கூட அதிமுக கொடுக்கவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications