நாளை தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை.. ஈரோட்டில் தீவிரவாதிகளா? என்ஐஏ சோதனை.. 2 பேரிடம் விசாரணை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 பேரை பிடித்து சென்ற அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Recommended Video
ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோட்டுக்கு நேற்று மாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) போலீசாருடன் வந்தனர். அவர்கள் திடீரென்று ஒரு வீட்டில் நுழைந்தனர்.
அந்த வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரகசிய இடத்தில் 2 பேரிடம் விசாரணை
இந்த விசாரணை இரவு 11 மணி வரை நீடித்தது. அதன்பிறகு என்ஐஏ அதிகாரிகள் 2 பேரை வேறு இடத்துக்கு அழைத்து சென்றனர். தற்போது அவர்களை ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் மாணிக்கம்பாளையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் இந்த சம்பவம் நேற்று ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்
மேலும் இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த செல்போன், மடிக்கணினி, டைரி, சிம்கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை 2 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனை ஏன்?
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது,‘‘கடந்த மாதம் 24ம் தேதி பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்குவைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றனர்.

தீவிரவாத அமைப்புடன் தொடர்பா?
மேலும் ஈரோட்டில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டதாக சந்தேகப்படும் நபர்கள் இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தான் என்ஐஏ அதிகாரிகள் ஈரோடு வந்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய பாதுகாப்புடன் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தற்போது நடந்த சோதனை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications