மதுரையில் அமித்ஷாவை விஜய் சந்திக்கிறாரா? தவெக பாஜக கூட்டணி இறுதியாகிறதா? நயினார் நாகேந்திரன் பதில்
ஈரோடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரை வருகையின் போது தவெக தலைவர் விஜய், பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அது போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் விவகாரத்தில் கைதான ஞானசேகரன் வழக்கிலும் நயினார் நாகேந்திரன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சோளங்காபாளையத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பிற்குரிய அக்கா சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை வைரஸ் யூரோமோனஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
மதுரையில் அமித்ஷா
அமித்ஷா மதுரைக்கு 7ம் தேதி இரவு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில (தமிழ்நாடு), மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார் என்றார்.
நயினார் நாகேந்திரன் பேட்டி
அப்போது அவரிடம், "அன்றைய தினம் விஜய், பாஜக கூட்டணியில் இணைவாரா" என்ற கேள்விக்கு, நயினார் பதிலளிக்கையில், "திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி அதனை அகற்ற அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். விஜய்க்கு அந்த எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். இதற்குமுன்பு கூட ஒருமுறை சொல்லியிருந்தேன். அதற்கு பதில் இனிதான் வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
மதுரையில் விஜய்
"மதுரையில் விஜய் இணைவது எதிர்பார்க்கலாமா" என்ற கேள்விக்கு இப்போது நிர்வாகிகள் கூட்டத்தை மட்டும் கூட்டுகின்றனர். கமல் சர்ச்சை பேச்சு குறித்து கேள்விக்கு "இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்கள் உள்ளனர். அவரவருக்கு அவர்கள் பேசும் மொழி பெரிது. அவரவர் தாய்மொழியை உயர்த்தி பேசுவது தவறில்லை. கமல் தாய்மொழியை உயர்த்தி பேசியது வரவேற்கதக்கது. மற்ற மொழியுடன் ஒப்பிட்டு பேசுவது பொருந்தாது" என்றார்.
அண்ணாமலை
அண்ணாமலை அறிவித்த 48 மணிநேரம் கெடு நாளையுடன் நிறைவடைய உள்ளது குறித்த கேள்விக்கு, "விரைந்து முடிக்க வேண்டிய அளவிற்கு ஞானசேகரன் வழக்கை போல் நிறைய நிலுவையில் உள்ளன. 2024 ஒரத்தநாடு பெண்ணை பாலியல் செய்துள்ளனர். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவருடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 10 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு வழக்கு உள்ளது.
19 கொலைகள்
தோட்டத்தில் தங்கவே பயப்படுகின்றனர். பழைய காலத்தில் கேள்விப்பட்ட விஷயம். சிவகிரி இரட்டை கொலை வழக்கில் பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் 19 கொலைகள் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
19 கொலைகளில் கைதானது யார்?
காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்திருக்க முடியும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? 19 கொலைகளை ஒப்புக் கொண்ட நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டது யார்? காவல்துறை தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை.
புலன் விசாரணை
புலன் விசாரணை சரியில்லை. காவல்துறையினரை வைத்துள்ள முதல்வர் சரியாக செயல்பட முடியவில்லையா? தமிழகத்தில் போதைப் பொருள் கஞ்சா பாலியல் படுகொலை சட்ட ஒழுங்கு சரியில்லை உள்ளிட்டவைகள் திறமையின்மையால்தான் நடக்க முடியும் என்றார்.
சிப்காட் விவகாரம்
சிப்காட் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் வரும்போது கருப்புகொடி காட்டப்படும் என முடிவெடுக்கப்பட்டதற்கு "இதற்கு முன்பு திமுக பலருக்கு கருப்புக் கொடி காட்டியுள்ளனர். கருப்பு கொடி போராட்டத்தில் பலர் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். நாங்கள் அப்படி செய்யமாட்டோம். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்". இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications