ஈரோட்டில் பணநாயகம்.. அதிமுக டெபாசிட் இழக்காமல் இருக்க வேண்டும்.. டிடிவி தினகரன் அட்வைஸ்!
ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகம் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வாபஸ் பெற்றவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள், டெபாசிட் இழக்காமல் இருக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சிவபிரசாந்த். ஈரோடு மாவட்ட அமமுக செயலாளரான இவர், இடைத்தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில், திடீரென குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் போட்டியில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில் சிவபிரசாந்த் இல்ல நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

டிடிவி தினகரன் பேட்டி
அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அமமுக மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே சிறப்பாக செயல்பட்டார். அவருடன் சேர்ந்து போர்க்களத்தில் அமமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகளை துவங்கினர்.

நேரமில்லை
ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னம் வழங்கவில்லை. அதற்காக நாங்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி சின்னத்தை பெற்றிருக்கலாம் . ஆனால் அதெற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. புதிய சின்னத்தை பெற்று அதில் நின்றிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அதனால் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிற்கவில்லை என்று தெரிவித்தார்.

பணநாயகம்
தொடர்ந்து, அமமுக தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுவிட்டது, தேர்தலை சந்திக்கவில்லை என்றதும் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கொண்டாடியவர்கள் டெபாசிட் இழக்காமல் இருக்க வேண்டும். காரணம் இங்கு சிலர் பணம் மூட்டையுடன் முகாமிட்டு உள்ளனர். ஈரோட்டில் பண நாயகம் தான் நடைபெறுகிறது. ஜனநாயகம் இல்லை என்று தெரிவித்தார்.

குக்கர் சின்னம்
மேலும், அமமுகவிற்கு கொடுத்து தான் பழக்கம், வாங்கி பழக்கம் இல்லை. சிலர் அமமுகவை பற்றியும், வேட்பாளரை பற்றியும் தவறாக பேசுகின்றனர். சில மரமண்டைகளுக்கு எங்களை பற்றி புரியாது . இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை நாங்கள் பெற்று இருப்போம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் நிச்சசயம் மலரச் செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications