மைக்கில்.. எடப்பாடி பேசிட்டிருக்கும்போதே.. பக்கத்துல தென்னரசு செய்ததை பாருங்க.. உடனே வந்தாச்சு வீடியோ
தென்னரசு வாக்கு கேட்கும் இடங்களில் தொகுதி மக்களிடம் எதிர்ப்புகள் வெடித்து வருகிறதாம்
ஈரோடு: விரைவில் நடக்க போகும் இடைத்தேர்தலில் பிரச்சாரங்கள் உச்சக்கட்ட நிலையை எட்டி வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வீடியோ ஒன்றினை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.
சுமார் 2.50 லட்சம் வாக்காளர்களை கொண்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலான பகுதிகள் மாநகராட்சி பகுதியில் வருகின்றன.
இந்த பகுதிகளில் 60 சதவிகிதத்திற்கும் மேல் செங்குந்த முதலியார் சமூகத்தினர் வாக்குகள் உள்ளன. மேலும் இந்த தொகுதியில் கொங்கு வேளாளர், சிறுபான்மையினர் மற்றும் பிற சமுதாய வாக்குகளே அதற்கு அடுத்த இடங்களில் உள்ளது.

ஈவிகேஎஸ்
திமுக கூட்டணியை பொறுத்தவரை ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த கே.எஸ்.தென்னரசுவின் பெயர் எடுத்த எடுப்பிலேயே அன்று லிஸ்ட்டில் இடம்பெற்றது.. ஆனால், இவருக்கு பதில் முதலியார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் தரலாமா என்ற ஆலோசனையிலும் எடப்பாடி தரப்பு ஈடுபட்டு, பிறகு அந்த முடிவை கைவிட்டது.. காரணம், தென்னரசுவுக்கு ஏற்கனவே இந்த தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளதாலும், தேர்தல் அனுபவம் பெற்றிருப்பதாலும் அவரையே வேட்பாளராக அறிவிக்க முடிவானது..

என்னா செஞ்சீங்க
அதுமட்டுமல்ல, பெரும் செல்வாக்கு பெற்ற தென்னரசு, சுயேச்சையாக நின்றால் கூட 10 ஆயிரம் வாக்குகள் அவருக்கு உறுதியாம்.. அந்த அளவுக்கு தொகுதி மக்களிடம் இத்தனை காலமும் நெருங்கியே வந்துள்ளார் தென்னரசு. என்றார்கள்.. தற்போது தொகுதிக்குள் நடந்து வரும் சம்பவங்களோ வேறு மாதிரியாக இருந்து வருவதாக தெரிகிறது.. 2 நாட்களுக்கு முன்பு, மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் தென்னரசு.. அப்போது அங்கிருந்த வியாபாரிகள், தென்னரசுவை முற்றுகையிட்டனர்.. "எம்எல்ஏவாக இருந்தபோது நீங்க எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுற்றிய வியாபாரிகள்
காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்துவதாக சொல்லி, அங்கிருந்த கடைகளுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகியும் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள், தென்னரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... எனினும், வாக்குவாதத்தை வளர்க்காமல், தென்னரசு அங்கிருந்து கிளம்பி சென்றனர். அதேபோல, வீரப்பன்சத்திரம் பகுதி கமலா நகரில் தென்னரசுக்காக வாக்கு சேகரிக்க அதிமுகவினர் சென்றுள்ளனர்.. அப்போது, பெண் வாக்காளர்கள் தென்னரசுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்...

ஏன் வர்றீங்க
"எம்எல்ஏவாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், இப்ப மட்டும் ஓட்டு கேட்டு வர்றீங்களே?" என்று குற்றம்சாட்டியதுடன், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினருடன் பெண் வாக்காளர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அதிமுக நிர்வாகிகள், இந்த பகுதிக்கு வர வேண்டாம் என்று தென்னரசுவுக்கு தகவல் கொடுத்து அலர்ட் செய்யவும், அங்கு வராமல் தென்னரசு தவிர்த்து விட்டதாகவும் செய்திகளும் வெளியாகின.

டென்ஷன்
இப்படி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு எதிராக, தொகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு காட்டி வரும் சம்பவங்களை கேள்விப்பட்டு, எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகி விட்டாராம்.. இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. தென்னரசுக்கு ஆதரவு கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 3 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. அந்தவகையில், நேற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திறந்த வேனில், ராஜகோபால் தோட்டம் என்ற இடத்தில் பிரச்சாரத்தில் எடப்பாடிபழனிசாமி ஈடுபட்டிருந்தார்.. வழக்கம்போல், ஆவேசமாக திமுகவை லிஸ்ட் போட்டு விமர்சித்து கொண்டும் இருந்தார்..

வணக்கம்
திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தென்னரசு அடிக்கடி தன்னுடைய முகத்தை துடைத்துக்கொண்டே இருந்துள்ளார்.. லேசான தூக்கத்தில் கண்ணயர்ந்துவிட்ட தென்னரசு, பிறகு சுதாரித்துக் கொண்டு, கூடியிருந்த மக்களை நோக்கி, "வணக்கம்" வைத்தார்.. எடப்பாடி பேசிட்டு இருக்கும்போதே தூங்கி வழிந்த தென்னரசு என்று சிலர் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.. ஆனால், "இதெல்லாம் இயல்பானது.. தென்னரசுக்கு களைப்பு அதிகமாகியிருக்கலாம்.. அசதி என்பது எல்லாருக்குமே வரக்கூடிய சாதாரண விஷயம்.. இதையெல்லாமா பெரிதாக எடுத்து பேசுவது?" என்று இணையவாசிகள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications