நிலத்தை கிரையம் கொடுத்து கடன் வாங்குறீங்களா.. ஈரோடு விவசாயிக்கு நடந்த சம்பவம்.. அறிய வேண்டியவை
ஈரோடு: குடும்ப கஷ்டம் காரணமாக அடமானம் வைத்த நிலத்தை முறைகேடாக விற்றதாக விவசாயி குற்றச்சாட்டி ஆடியோ வெளியிட்டுள்ளார். பிரச்சனையை தீர்ப்பதாக கூறி ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு வி.சி.க. நிர்வாகி மிரட்டுவதாகவும் ஆடியோவில் புகாராக கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நிலப்பிரச்சனை தொடர்பாக அதன் உரிமையாளரான விவசாயி ஒருவரிடம், விசிக நிர்வாகி ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாக ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாரம்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் தனது 62 சென்ட் நிலத்திற்கான பத்திரத்தை குணசேகரன் என்பவரிடம், குடும்பகஷ்டம் காரணமாக அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். சுமார் 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், முறையாக அவர் வட்டி கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நிலத்தை பொன்னுச்சாமிக்கு தெரியாமல் குணசேகரன் வேறுநபருக்கு விற்றதாக கூறப்படுகிறது. நிலத்தை கிரையம் பெற்ற அந்த நபர்கள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வேலி அமைக்க முயன்றார்களாம். அப்போது பொன்னுச்சாமி வேளி அமைக்கவிடாமல் தடுத்தாராம்.

இதனிடையே பிரச்சனையாக தீர்ப்பதாக கூறி சாமிநாதன் என்பவர் விவசாயி பொன்னுச்சாமியிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாயி பொன்னுச்சாமி வெளியிட்ட ஆடியோ வெளியாகி உள்ளது. விவசாயி பொன்னுச்சாமி இதுபற்றி கூறுகையில், இந்த விஷயத்தில் காவல்துறை எனக்கு உதவி செய்ய வேண்டும்.. நான் ரெக்கார்டு கேட்ட போது, கிரையம் செய்த பத்திரத்தை கொடுக்க முடியாது என்றார்கள்.
இது பூர்வீக சொத்து என்பதால் இதன் மூலப்பத்திரம் என்னிடம் தான் இருக்கிறது. நான் என் நிலத்தை அடமானம் வைத்து வட்டிக்குத்தான் கடன் வாங்கினேன். என் பூமியை நான் எந்த காரணத்திற்காகவும் விற்கவே இல்லை.. வட்டியை சரியாகவே செலுத்தி வந்தேன். ஆனால் ஐந்து ஆறு மாதங்களாகத்தான் கட்ட முடியவில்லை.. இப்போது மொத்தமாக கொடுத்து முடிக்கலாம் என்று நினைத்தேன்.. ஆனால் அவர் கிரையம் கொடுத்துவிட்டதாக கூறி என்னை அனுப்பினார். என்னிடம் அராஜகம் செய்கிறார்கள்" இப்படியாக கலங்கியபடி விவசாயி கூறினார்.
பொதுவாக வீடு அல்லது நிலம் அல்லது விவசாய நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்க விரும்புவோர் தனியார் கந்துவட்டிக்காரர்களிடம் போய் சிக்கி கொள்கிறார்கள். சரியான வருமானம் இல்லாதவர்களுக்கு நிலத்தை அடமானம் வைத்து கடன் பெறுவதை வங்கிகள் ஊக்குவிக்கவில்லை. வெறும் வட்டியை மட்டும் கட்டி அசலை எப்போதாவது கட்டிக் கொள்ளலாம் என்ற வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் வேறுவழியில்லாமல் கந்து வட்டிக்காரர்களை நாடுகிறார்கள்.
ஆனால் கந்துவட்டிக்காரர்கள் நிலத்தை அடமானமாகவைத்து பணம் தர பல்வேறு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். எப்படி என்றால், கடன் வாங்குவோர் நிலத்தை, கடன்கொடுப்பவருக்கு அவர் கடன் வாங்கும் தொகைக்கு கிரயம் செய்து கொடுத்துவிட வேண்டும். அந்த கிரய செலவு கடன் தரும் தொகையில் கழித்துக் கொள்ளப்படும். அதன்பிறகு மாதம் மாதம் சரியாக வட்டிகட்ட வேண்டும். தொடர்ந்து சில மாதங்கள் வட்டி கட்டவில்லை என்றால், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு அவர் விற்றுவிடுவார் அல்லது திரும்ப கடனை கட்டினாலும் கிரையம் செய்து தரமாட்டார். அப்படித்தான் நிபந்தனை விதிப்பார்கள்.
இப்படி நிலத்தை ரிஸ்க் எடுத்து கிரையம் செய்து கடன் வாங்கியவர், கடனை கட்டி முடித்த பின்னர், மீண்டும் கிரைய செலவை ஏற்றால் தான் பத்திரப்பதிவு செய்து தருவார். இந்த ஆபத்துக்களை தெரிந்தும் பல விவசாயிகள், கூலி தொழிலாளிகள் ஏற்கிறார்கள். கடைசியில் நிலத்தை அல்லது வீட்டை குறைந்த கடனுக்கு இழந்துவிடுகிறார்கள் . இது அதிகமாக நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாகவே நிலத்தை கிரையம் செய்து கொடுத்துவிடுவதால், கிரையம் கொடுத்தவரை, கிரையம் வாங்கியவர் கேட்கவே முடியாது. கந்துவட்டி பிரச்சனை தொடர்பாக மட்டுமே பேச முடியும் என்கிற நிலை உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications