சிக்கலில் சீமான்.. அருந்ததியர் தமிழர் இல்லையா? முதலியார்களுக்கு புகழ்ச்சி! ஈரோட்டில் வெடித்த சர்ச்சை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் முதலியார் சமுதாயத்தினரை போற்றி, அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஜாதி அரசியல் செய்வதாக தமிழ் புலிகள் அமைப்பின் முத்துக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இதற்காக நாம் தமிழர் கட்சியினர் அங்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஆற்றிய உரையை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலியார்களை புகழ்ந்த சீமான்
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மத்தியில் பேசிய பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கு பட்டாடை செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்.

அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள்
கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைப்போல எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போட வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள்." என்று தெரிவித்தார்.

பெரும்பான்மைக்கு சீட் கொடுத்த சீமான்
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அருந்ததிய சமுதாயத்தினர் 6% என்ற அளவில் உள்ளார்கள். இதில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை.

கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மட்டுமே அந்த சமுதாயத்தை சேர்ந்தவர். திராவிட கட்சிகள் ஜாதி அடிப்படையில் சீட் கொடுப்பதாக குற்றம்சாட்டி வந்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பாளரே பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்ற விமர்சனம் இதற்கு முன் எழுந்தது. இந்த நிலையில் சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் புலிகள் முத்துக்குமார்
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், "அருந்ததி மக்கள் வந்தேறிகள் என்பதை சீமான் நேரடியாக சொல்லி இருக்கிறார்கள். விஜயநகர பேரரசிடம் முதலியார்கள் மறுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? எந்த புத்தகத்தில் படித்தேன் என்பதை சொல்லவே மாட்டார். ஏனென்றால் சீமான் பேசுவதற்கு ஆதாரமே இருக்காது.
|
ஜாதி ரீதியாக பிளவு
வாய்க்கு வந்ததை உளறுவதே சீமானின் வேலை. ஓட்டுக்காக ஒரு சமூக மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்பவர்தான் சீமான். ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூகத்தினரை உயர்ந்தவர்கள் என்று சொல்லி, இந்துத்துவா, பாஜக டார்கெட்டிற்குள் அவர்களை கொண்டு வந்து சேர்க்கும் வேலையைதான் முதலியார்கள் சமூகத்திலும் அவர் செய்கிறார்கள்.

கல்வெட்டு ஆதாரம் இருக்கு
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது. அவர்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொடுத்த அஜெண்டாவை செய்து வருகிறார் சீமான். தென்னிந்திய கல்வெட்டுகள் 7வது தொகுதி 49 வது பக்கத்தில் ஒரு பாடல் உள்ளது. அந்த பாடல் இப்போது திரித்து கூறப்பட்டு உள்ளது. விஜயநகர பேரரசு தமிழ்நாட்டுக்கு வந்தது 1500 க்கு பின்னால்.












Click it and Unblock the Notifications