அவர் ஃபோட்டோ எப்படி இருக்கலாம்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க! ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த கெஜ்ரிவால்
டெல்லி: துணை நிலை ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்து உள்ளார்.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு ஆம் ஆத்மிக்கு முழு அதிகாரம் இல்லை.
இதனால் பல நேரங்களில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் அங்குள்ள ஆம் ஆத்மி அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும்.

டெல்லி
இந்தச் சூழலில் மற்றொரு நிகழ்வாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் இருவரும் நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டனர். நிகழ்ச்சி மேடையில் இடம்ப பெற்றிருந்த போஸ்டரே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

புறக்கணிப்பு
அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு அரசியலாக்க முயல்வதாக ஆம் ஆத்மி அமைச்சர் விமர்சித்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு முதலில் ரெடி செய்யப்பட்டு இருந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வரின் புகைப்படம் மட்டுமே இருந்தன. ஆனால், கடைசி நிமிடத்தில் அதை மாற்றப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம்பெறும் வகையில் மேடையில் இருக்கும் பேனர்கள் மாற்றப்பட்டன.

அரசியல்
டெல்லி அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கோபால் ராய் கலந்து கொள்ள இருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டனர். இது தொடர்பாக கோபால் ராய் கூறுகையில், "பிரதமர் அலுவலகம் டெல்லி போலீசார் மூலம் நிகழ்ச்சியை ஆக்கிரமித்துவிட்டனர். கடைசி நேரத்தில் அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பிரதமர் மோடியின் படத்தை வைத்துவிட்டனர்

விமர்சனம்
அந்த இடத்தில் எல்இடி ஸ்கிரீன்களை வைக்கத் தான் திட்டமிட்டு இருந்தோம். நிகழ்ச்சி தொடங்கிய பின்னர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களை ஒளிபரப்புவதே எங்கள் திட்டம். இருப்பினும், அவர்கள் கடைசி நேரத்தில் அந்த எல்இடி ஸ்கீரனை தூக்கிவிட்டு பேனரை வைத்துவிட்டனர். இது ஏற்க முடியாதது" என்று தெரிவித்தனர். டெல்லி அரசு பேனர் தொடர்பாக அனுப்பிய டிசைன்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாமலேயே இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

விளக்கம்
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் அரசியல்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். டெல்லி அரசு தான் அப்பகுதியின் பாஜக எம்பியை நிகழ்ச்சிக்கு அழைக்காமல் அரசியல் செய்வதாகத் தெரிவித்து உள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அழைத்த போதிலும், வேண்டுமென்றே பாஜக எம்பியை அழைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications