ஈரோடு தேர்தல்: காங். டூ நாம் தமிழர் வரை.. போட்டியாளர்களின் சொத்து மதிப்புகள் எவ்வளவு தெரியுமா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்தார். இதானல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகின்றனர்.

77 பேர் களத்தில்..
தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனுவை தாக்கல் செய்த ஓ. பன்னீர் செல்வம் தரப்பும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகமும் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கின. ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 பேர் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுகவிற்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

வீதி வீதியாக பிரசாரம்
இதனால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஈரோட்டில் முகாம் இட்டுள்ளனர். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந் தேதி முதல் 5 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்)
சொத்து மதிப்பு : ரூ. 3 கோடியே 50 லட்சம்
மனையின் சொத்து : 7 கோடியே 16 லட்சம்
குடும்ப சொத்து : 7 கோடியே 16 லட்சம்
கடன் மதிப்பு : 1 கோடியே 29 லட்சம்
மனைவியின் கடன் : 47 லட்சத்து 55 ஆயிரம்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு
சொத்து மதிப்பு : 2 கோடியே 27 லட்சம்
மனைவியின் சொத்து : 1 கோடியே 78 லட்சம்
கடன் எதுவும் இல்லை.

ஆனந்த் (தேமுதிக)
சொத்து மதிப்பு : 14 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்
வங்கிக் கடன்: 2 லட்சம்.

மேனகா நவநீதன் (நாம் தமிழர்)
சொத்து மதிப்பு : 9 லட்சத்து 70 ஆயிரம்
கணவர் சொத்து மதிப்பு : 2 லட்சத்து 69 ஆயிரம்
கடன் மதிப்பு : 4 லட்சத்து 80 ஆயிரம்
கணவரின் கடன் : 3 லட்சத்து 53 ஆயிரம்.












Click it and Unblock the Notifications