விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்த அரசு! பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடும் வறட்சி நிலவுவதால் கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதிய அளவு நீர் இல்லாததால் மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கீழ்பவானி கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Bhavanisagar Dam Releases 500 Cusecs of Water Into Lower Bhavani Canal

ஈரோடு, பெருந்துறையில் பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கீழ் பவானி பாசன விவசாயிகள் இரவில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் மாவட்ட அமைச்சர்களிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை இல்லை எனவும், பாசனத்தில் பயிர்களை காப்பாற்ற தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போதிய அளவு நீர் இல்லாததால் மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று நீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கீழ்பவானி கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கீழ்பவானி கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெற்றனர். இன்று முதல் 15 நாட்களுக்கு கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+