வலுத்திருக்கிறது.. பழுக்கவில்லை! அப்பாவே மகனை ட்ரோல் பண்ணிட்டா.. நாங்க என்ன பண்றது? அண்ணாமலை கிண்டல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் பழுக்கவில்லை. தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை.. தந்தை மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பாஜக 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நாளை முதல் திருப்பூரில் கூட்டம் தொடங்க உள்ளது.

Annamalai Udhayanidhi Stalin Mk Stalin

பாஜக கட்சி ஒருவனை படி படி என்று சொல்லும்.. மற்ற கட்சி போன்று குடி குடி என்று சொல்லாது அதனால்தான் இங்கிலாந்து சென்று படிக்க உள்ளேன். அத்திக்கடவு அவிநாசி திட்டம் கால தாமாகி வருகிறது. எத்தனை முறை காலதாமதம் செய்வது. இன்று அமைச்சர் முத்துசாமி தேதி அறிவிக்கட்டும். தேதி முடிவு செய்யட்டும் தேதி அறிவிக்காத நிலையில் அமைச்சர் முத்துசாமி பேச்சை எப்படி நம்புவது.

இந்த மாதம் இறுதிக்குள் திட்டம் நடைமுறைக்கு வரும் அமைச்சர் முத்துசாமி திட்டம் தொடங்குவதற்கு முதல்வரிடம் அமைச்சர் தேதி வாங்கிவிட்டாரா? நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் கைவிட பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம். திமுகவில் 40ஆண்டுகளுக்கு தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் போன்று பாஜகவில் கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர் பணிகளை கவனிப்பார்கள்.

பாஜகவின் தற்போதைய கூட்டணி கூட்டணி ஆட்சியை முன்வைத்த தான் கூட்டணி ஆட்சி அமைத்தோம். தமிழகத்தில் 70ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு எழுந்தது, கூட்டணிக்குள் யார் வந்தாலும் கூட்டணி ஆட்சியில் சந்தேகம் இல்லை, தமிழ்நாட்டின் கூட்டணி ஆட்சி கூட்டணி தர்மமாக பார்க்கப்படுகிறது,
திமுக அதிமுக கூட்டணி ஆட்சி என்று சொன்னால் அரசியல் களம் மாறும். 2026ம் ஆண்டு நான்கு போட்டி உள்ளது எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள் வெற்றி பெற முடியும்.

நல்லவர்களும் 2026ம் ஆண்டு தேர்தலின் போது வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். அப்போது தான் மக்களுக்கு யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்ற வாய்ப்பாக இருக்கும். தமிழக அரசியல் அடியோடு 2026ம் ஆண்டு தேர்தலில் மாறும். சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் தனியாக வெற்றி பெற்றாலும் கூட்டணி கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்து உள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்கு சதவிகிதம் உயரவில்லை என்றால் கட்சி எங்காவது தவறு செய்கிறது என்று தான் அர்த்தம். காங்கிரஸ் கட்சி இன்னும் வளரவில்லை. திமுக அதிமுக கட்சி அண்ணாமலை தவிர மற்ற கட்சிகளை புகழ்ந்து பேசுகிறார்கள். இதனால் என் மூலம் நான் பழைய தலைவர்களுக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்து உள்ளேன். திமுக அதிமுக கட்சி பாஜக மீதான விமர்சனம் பாஜக வளர்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் பழுக்கவில்லை. தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை. தந்தை மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது.

வினேஷ் போகத் எடை அதிகரிப்பு காரணத்திற்கு மோடி தான் போஸ்டர் என திமுக ஒட்டப்படுகிறது. இதை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்த நடக்கிறது. அறிவுபூர்வமான அரசியல் நடந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்.

பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் மீது பல வருடத்திற்கு முன்பு புகார் கொடுத்து இருந்தார்.,பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் உறவு குறித்து விளக்கம் அளித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பால் கனகராஜ் விசாரணைக்கு அழைத்தது சரி தான் தவறு தான் காவல்துறை அனைத்து வகையிலும் விசாரணை செய்வது வழக்கம் தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+