தமிழகத்தில் பாஜக வளர்கிறதாம்! நாம் தமிழர் எப்படி? சர்வே முடிவால் திரும்பி பார்க்கும் திமுக, அதிமுக! ஓஹோ
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களில் மக்கள் மத்தியில் பாப்புலர் யாருக்கு அதிகம் இருக்கிறது என்பது பற்றிய புதிய சர்வே முடிவு வெளியாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அங்குள்ள மக்களிடம் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வளர்கிறதா? மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? என்பது பற்றிய கேள்விகளுடன் அமைந்த சர்வேயில் இருகட்சிகளுக்கும் சாதகமான முடிவுகளை மக்கள் தெரிவித்துள்ளனர். இது பாஜக, நாம் தமிழர் கட்சியினர் உற்சாகம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் திமுக, அதிமுகவினர் கவனிக்க தொடங்கி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கி உள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே உள்ளவர்கள் இன்று மாலையுடன் ஈரோடு கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வே முடிவு
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து Spick Media மற்றும் அஜய் பவுண்டேஷன் இணைந்து சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 17 ம் தேதி வரை இந்த சர்வே நடந்தது. 14,160 பேரிடம் 28 வகையான தமிழ், ஆங்கிலத்தில் வினாப்பட்டியல் வழங்கி சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயின்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக வளர்கிறதா?
மேலும் இந்த சர்வேயில் பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் தங்களின் கருத்துகளை பதில்களாக அளித்துள்ளனர். இந்த சர்வேயில் 11வது கேள்வி என்பது ‛‛தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறதா?'' என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதில் பாஜக வளர்கிறது என 36.60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜக வளரவில்லை என 34 சதவீதம் பேரும், சொல்ல முடியவில்லை (Can't Say)24.81 சதவீதம் பேரும், பதில் இல்லை (No Response) என 4.59 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை செயல்பாடு
இதேபோல் 12வது கேள்வியாக‛தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு உங்கள் பார்வையில் எப்படி உள்ளது?'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது என 18.30 சதவீதம் பேரும், சிறப்பாக உள்ளது என 27.93 சதவீதம் பேரும், மோசமாக இருக்கிறது என்று 26.02 சதவீதம் பேரும், ரொம்ப மோசமாக உள்ளதாக 16.77 சதவீதம் பேரும், பதில் இல்லை என 10.98 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி
அதேபோல் இந்த சர்வேயில் 20வது கேள்வியாக நாம் தமிழர் கட்சியை பற்றிய பேகள்வி இடம்பெற்றிருந்தது. அதன்படி ‛‛தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வளர்கிறதா?'' என அமைந்திருந்த அந்த கேள்விக்கு ஆம் என்று 15.04 சதவீதம் பேரும், இல்லை என 31.09 சதவீதம் பேரும், சொல்ல முடியவில்லை(Can't say) என 47.99 சதவீதம் பேரும், பதில் இல்லை என (No response) என 5.88 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

சீமான் செயல்பாடு
21வது கேள்வியாக ‛‛நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடு எப்படி இருக்கிறது?'' என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது என 15.01 சதவீதம் பேரும், நன்றாக உள்ளது என 28.20 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 21 சதவீதம் பேரும், ரொம்ப மோசமாக இருப்பதாக 20.88 சதவீதம் பேரும், பதில் இல்லை என 14.91 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications