மருமகனுக்கு எம்.பி.சீட் கேட்கும் பாஜக எம்.எல்.ஏ.! எடப்பாடியிடம் அமித்ஷா கொடுத்த லிஸ்டில் ஈரோடு!
ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதியில் தனது மருமகனுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதில் மும்முரமாக உள்ளாராம் திருச்செங்கோடு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி.
பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் சம்பந்தி சவுந்தரத்தை பொறுத்தவரை முன்னாள் அதிமுக எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சவுந்திரத்தின் மகன் தான் அசோக்குமார். தனது அம்மா சவுந்தரம் அதிமுக சார்பில் எம்.பி.ஆகியதை போல் தாம் பாஜக சார்பில் எம்.பி.யாக விருப்பப்படுகிறாராம் அசோக்குமார்.

இதனால் தான் தனது மாமியாரும், திருச்செங்கோடு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி மூலம் ஈரோடு தொகுதியில் சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய போது, ஈரோடு மக்களவைத் தொகுதி குறித்த பேச்சும் நடந்திருக்கிறது.
பாஜக விரும்பும் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடியிடம் அமித்ஷா கொடுத்த போது அதில் ஈரோடு மக்களவைத் தொகுதியும் இருந்திருக்கிறது. இதனை முன் கூட்டியே எதிர்பார்த்து சென்ற எடப்பாடி பழனிசாமி, நீங்கள் நினைப்பது போல் ஈரோட்டில் பாஜகவுக்கு சாதகமாக களம் இல்லை என விரிவாக புள்ளிவிவரங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஈரோடு தொகுதியை கேட்க வேண்டாம் என அந்த இடத்திலேயே அமித்ஷாவிடம் சூசகமாக தெரிவித்துவிட்டுத் தான் புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்குள் இங்கு கூட்டணிக்குள் பெரிய களேபரம் நடந்துவிட்டதால், ஈரோடு மக்களவைத் தொகுதி விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications