அரண்டு போய் பார்த்த சுதீஷ்.. விஜயபிரபாகரன் விடலையே.. ஒரே ஆக்ரோஷம்.. குதூகலமான தேமுதிக.. 3 ப்ளான்கள்
விஜயகாந்தின் தேமுதிக சார்பாக, சுதீஷ், விஜயபிரபாகரன் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்தனர்
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக களமிறங்கி உள்ள நிலையில், மொத்தம் 3 அரசியல் கணக்குகளை போட்டுள்ளதாம்.. அத்துடன் தேமுதிக பிரச்சாரம் ஈரோட்டில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக களம் இறங்கி உள்ளது.. தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் இருவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் பாமகவை போல, தேமுதிகவும் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், யாருக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க போவதில்லை என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

முதல் காலடி
காரணம், அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும்நிலையில், வரும் எம்பி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயற்சிப்பதாகவும், வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று அக்கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதாம்.. மேலும், தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் அக்கட்சிக்கும் வரப்போகும் தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்கிறார்கள்..

ஈர மனசு
அதனால், கூட்டணியில் இடம் பெற தூது விடும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. அப்படி திமுக கூட்டணியில் தேமுதிக இணைய நேர்ந்தால், கள்ளக்குறிச்சி தொகுதியை அக்கட்சிக்கு ஒதுக்குவதுடன், அங்கு சுதீஷை நிறுத்தவும் ஒரு பேச்சு உள்ளதாக சொல்லப்படுகிறது.. கள்ளக்குறிச்சியில், மற்ற கட்சிகளை போல தேமுதிகவுக்கும், ஓரளவு வாக்கு வங்கி இருப்பதாலும், ஏற்கனவே சுதீஷ் இங்கு போட்டியிட்ட தொகுதி என்பதாலும், இந்த முறையும் இதே தொகுதி ஒதுக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.. கூட்டணி குறித்து இப்படியான சலசலப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிட போவதாக கூறி, வேட்பாளரையும் அறிவித்துள்ளது.

விஜயகாந்த் ப்ளான்
டிடிவி தினகரன், பாமக, பாஜக போன்ற கட்சிகள் போட்டியிடாத சூழலில் தேமுதிக ஏன் போட்டியிட துணிந்தது என்பது குறித்து சில தகவல்களும் வெளியாகின.. தமிழகமெங்கும் ஆங்காங்கே தேமுதிக தொண்டர்கள் சிதறி கிடந்தாலும், இந்த தொகுதியில் மட்டும் விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் ஏராளம் என்கிறார்கள்.. அதனால்தான், கடந்த 2011 தேர்தலிலேயே திமுகவை தோற்கடித்தது தேமுதிக.. இப்போதும் இந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதாலேயே, அவர்களை நம்பியே பெரிதும் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது. டபுள் டிஜிட் வாக்குகளை குறி வைத்தும் பிரச்சாரத்தை விரிவுபடுத்தி வருகிறதாம்.

விஜய பிரபாகரன்
அதுமட்டுமல்ல, இப்போதைக்கு எந்த அளவுக்கு கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியுமோ அவ்வளவும் எம்பி தேர்தலில் தங்களுக்கு உதவும் என்றும் தேமுதிக கணக்கு போட்டுள்ளதாம். அதைவிட முக்கியமாக, விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் விதமாகவும் இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ள அக்கட்சி முயன்றுள்ளதாம்.. இதனாலேயே சுதீஷைவிட, விஜயபிரபாகரனின் பேச்சின் வீரியமும், காட்டமும் இந்த பிரச்சாரத்தில் எதிரொலித்து வருகிறது என்கிறார்கள்..

சின்னப்பையன்
நேற்றுமுன்தினம் பிரச்சாரத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்... அப்போது திடீரென ஆவேசம் அடைந்த விஜயபிரபாகரன், "இந்த சவுண்டெல்லாம் இங்க விடக்கூடாது. . முறையாக பர்மிஷன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்கிறோம்... விஜயகாந்த் மகன் சின்னப்பையன்னு மட்டும் நினைச்சிடாதீங்க.. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக வந்து நிற்பேன்.. நீங்கள் விஜயகாந்த், பிரேமலதா 2 பேரையும் பார்த்திருக்கலாம்.

விஜயகாந்த் மனசு
ஆனால், நான் அவங்க 2 பேரும் சேர்ந்த விஜயபிரபாகரன்... நீங்கள் பார்த்திருக்க மாட்டீங்க" என்று சீறியிருக்கிறார்.. இதை பார்த்ததுமே தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் குஷியாகிவிட்டார்களாம்.. இந்த வீடியோவையும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சல் + வாக்கு வங்கியை பலப்படுத்துதல் + விஜயபிரபாகரனுக்கான என்ட்ரி என 3 விதமான பிளான்களுடன் தேமுதிக களமிறங்கி உள்ளதால், இந்த இடைத்தேர்தலில் முக்கிய தடத்தை தேமுதிக பதித்து செல்லும் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் கேப்டனின் தொண்டர்களும், ரசிகர்களும்..!!
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026.. திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம, விசிக காங்கிரஸ்.. யாருக்கு லாபம்.. ஏமாந்தது யார்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications