எதிர்க்கட்சித் தலைவரே.. கண் டாக்டரிடம் கண்ணாடி வாங்கி போட்டுக்கொள்ளுங்கள்.. மு.க.ஸ்டாலின் பதிலடி!
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று கூறும் எதிர்க்கட்சி தலைவரே, கண் தெரியாவிட்டால் கண் டாக்டரை பார்த்து கண்ணுக்கு கண்ணாடி வாங்கிப்போட்டு திமுகவின் சாதனைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த நாளில் இருந்து தமிழ்நாடு அரசு மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தீவிரமானது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக பேசியதற்கு, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
22 மாத திமுக ஆட்சியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
இந்த பிரச்சாரத்தில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள், கொண்டு வரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். ஈரோடு பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நிறைவேற்றி தருவோம் என்று வாக்களித்தீர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது.

ஸ்டாலின் வாசித்த பட்டியல்
ஆதாரங்களுடன் திமுக செய்த சாதனைகளை பட்டியலிடுகிறேன். காலை உணவுத்திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சில ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

திமுகவின் திட்டங்கள்
யாரும் கோரிக்கைகள் வைக்காமலேயே இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது. திமுகவின் சாதனைப்பட்டியல் மிக நீண்டது. உலக அளவில் செஸ் வீரர்கள் பெருமைப்படும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டது. நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்று போராடி வருகிறோம். அதிலும் வெற்றி பெறுவோம்.

கண் டாக்டரை அணுகுங்கள்
எத்தனையோ அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. எதிர்கட்சி தலைவருக்கு கண் தெரியாவிட்டால் நல்ல கண் டாக்டரை பார்த்து கண்ணுக்கு கண்ணாடி வாங்கிப்போட்டு பார்க்கட்டும். இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதற்குள் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000
இன்னொரு முக்கியமான வாக்குறுதி இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அது எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கேட்டறிந்து, ஈரோடு பிரச்சாரத்தின் கடைசி நாளில் முதலமைச்சரே நேரடியாக பதிலடி கொடுத்துள்ளது அக்கட்சியினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications