தீவிர பிரசாரம் செய்த சீமான்! ரத்தம் சிந்திய தம்பிகள்! பலன் பெறாத நாம் தமிழர்! டெபாசிட் காலி

ஈரோடு கிழக்கு தொகுதியிலும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அக்கட்சி தொடர்ந்து டெபாசிட் இழந்து வருகிறது.

இந்த தொகுதியில் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்

காங்கிரஸ் வேட்பாளர்

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளையும் அதிமுக 43981 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 8474 நாம் தமிழர் கட்சி 10804 வாக்குகளையும் தேமுதிக 1177 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றதாக அறிவிக்கப்பட்டார். மொத்தம் வாக்கு வித்தியாசம் 66,575 ஆகும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகளும் அரசியல் நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். எனினும் இடைக்கால பொதுச் செயலாளர், ஒற்றைத் தலைமை ஆகிய அடையாளங்களுடன் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய அதிமுக வேட்பாளரின் வாக்கு எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தோல்வி

தோல்வி

அது போல் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தேமுதிக இந்த முறை குறைந்தபட்சம் டெபாசிட் வாங்கும் அளவுக்காவது முன்னேறி இருக்கும் என்பதை அறியவும் ஆவல் ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் தமிழர் கட்சியின் சீமான் பிரச்சாரம் செய்த போதிலிருந்தே அருந்ததியர் குறித்து அவதூறு பேசியதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அருந்ததியினர் சீமானுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

திமுக- நாம் தமிழர்

திமுக- நாம் தமிழர்

இதையடுத்து திமுக- நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் காயம் அடைந்தனர். மேலும் சீமான் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது. இப்படியெல்லாம் போராடிய நாம் தமிழர் கட்சி இந்த இடைத்தேர்தலில் 10804 வாக்குகளை பெற்றது. ஆனால் டெபாசிட்டை இழந்துவிட்டது.

50 சதவீத வாக்குகள்

50 சதவீத வாக்குகள்

இது கடந்த முறை பெற்ற வாக்குகளை நாம் தமிழர் நெருங்கியது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகளை பெற்றிருந்தார். அவருடைய வாக்கு சதவீதம் 7.65 ஆகும். இந்த முறையும் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது. சீமான் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு பார்த்தார். அவருடைய தம்பிகள் ரத்தம் சிந்தி பார்த்தனர். ஆனாலும் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+