எடப்பாடிக்கு போன "பவர்".. உஷாரான திமுக.. அடிமட்டம் வரை பாய்ந்த "மெசேஜ்".. அட அட அதுக்குள்ளேயா?
அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்த தீர்ப்பு திமுகவின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
ஈரோடு: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், திமுக தரப்பு ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறதாம்.
பொதுக்குழு வழக்கில் இப்போதைக்கு தீர்ப்பு வராது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று மாலை வெளியான கோர்ட் லிஸ்டிங்கில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு அந்த முக்கியமான தீர்ப்பு வெளியானது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது.

தீர்ப்பு சொல்வது என்ன?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தேர்தல் களம்
இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்காக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் களத்தில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார்.

பிரச்சாரம்
தற்போது கே. எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தற்போது தீர்ப்பு காரணமாக எடப்பாடிதான் அதிமுக என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே அவரின் கையில் சின்னம் இருக்கிறது. தற்போது பொதுக்குழு வழக்கிலும் எடப்பாடி வென்றுவிட்டார். இதனால் ஈரோடு அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. அதாவது அதிமுக பழைய நிலைமைக்கு சென்றுவிட்டு.. மீண்டும் ஒற்றை தலைமைக்கு கீழ் வந்துவிட்டது என்ற உற்சாகத்தில் நிர்வாகிகள் இருக்கின்றனர். இதனால் தேர்தல் களமே பெரிய அளவில் மாறி உள்ளது.

அதிமுக
அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் திமுக மேலிடத்தில் இருந்து அமைச்சர்கள், நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் வரை முக்கிய மெசேஜ் ஒன்று சென்றுள்ளதாம். இன்று பிற்பகல் சென்ற அந்த மெசேஜில், எதிர்க்கட்சிகள் தரப்பில் கொஞ்சம் ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.தேர்தல் பணிகளை தீவிரமாக செய்யுங்கள். இன்னும் 2 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். பணிகளை இதற்காக தீவிரப்படுத்துங்கள். சில வார்டுகளில் பணிகள் சரியாக நடக்கவில்லை. எந்ததெந்த அமைச்சர்களுக்கு வார்டுகளை கொடுத்து இருக்கிறோமோ அவர்கள் பணிகளை வேகப்படுத்துங்கள்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications