திமுக சிறுபான்மையினர் நல அணி வீக்! ஈரோடு கிழக்கில் சிதறும் ஓட்டுக்கள்? ஆளை இறக்கிய அமைச்சர் மஸ்தான்!
திமுக சிறுபான்மையினர் நல அணி பலவீனமாக இருக்கிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குவங்கி கணிசமாக உள்ள நிலையில் அதை அறுவடை செய்வதற்கு கூட்டணியில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களை சார்ந்திருக்கிறது திமுக தலைமை.
திமுகவிலேயே சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு என்று ஒரு சார்பு அணி இருந்தும் அந்த அணியின் நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு காரணம் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவில் மாநிலச் செயலாளர் பதவி காலியாக இருப்பதே. நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வேலை வாங்க ஆள் இல்லாததால் அணியின் செயல்பாடும் வீக் ஆகி வ்ருகிறது.
இதனிடையே திமுக சிறுபான்மையினர் நல அணியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஜே.எம்.பஷீர் பள்ளிவாசல் பள்ளிவாசலாக சென்று ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
ஜே.எம்.பஷீரை இப்படி களமிறக்கி திமுகவுக்கும் முஸ்லீம் ஜமாத்தினருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இஸ்லாமியர்களின் ஓட்டுவங்கி வெற்றி தோல்வியை தீர்மானம் செய்யக் கூடிய இடத்தில் உள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிமுக தரப்பில் கூடுதல் உழைப்பு செலுத்தப்படுகிறது. அதிமுக சிறுபான்மை அணி நிர்வாகிள் முழு வீச்சில் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு இஸ்லாமிய மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக தரப்பு
ஆனால் திமுக தரப்பிலோ திமுக சிறுபான்மை அணி நிர்வாகிகளை தேடி பிடிக்க வேண்டிய நிலை தான் உள்ளது. அதிமுகவுக்கு இணையாக திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே இந்த குறையை மமக, தமுமுக, முஸ்லீம் லீக், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை வைத்து ஈடு செய்து வருகிறார்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள். திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநிலச் செயலாளர் டாக்டர் மஸ்தான் அண்மையில் காலமான நிலையில் அவர் வகித்து வந்த பதவி இன்னும் காலியாகவே உள்ளது.

அமைச்சர் மஸ்தான்
இதனிடையே சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஈரோட்டில் முழுக்க முழுக்க முகாமிட்டு ஜமாத் நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜே.எம்.பஷீரை தனது சார்பில் களமிறக்கி அதிமுக சிறுபான்மையினர் அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறார். திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநிலச் செயலாளர் பதவிக்கு ஜே.எம். பஷீர் காய் நகர்த்தி வருவதை ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் ஒரு மாதத்துக்கு முன்பு கூறியிருந்தோம்.

முழுமையாக தங்கி
இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் அவரும் ஈரோட்டிலேயே முழுமையாக தங்கி அமைச்சர் மஸ்தானின் தேர்தல் பணிச்சுமையை குறைத்து வருகிறார். ஜே.எம்.பஷீரை பொறுத்தவரை அதிமுகவில் சிறுபான்மை நல அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications