ஈரோடு கிழக்கில் திமுகவுக்கு போன அதிமுக ஓட்டு! நாதகவுக்கு கிடைத்த பாஜக வாக்கு! டேட்டாவை பாருங்க!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் திமுகவுக்கும் பாஜக வாக்குகள் அப்படியே நாதகவுக்கு போயிருப்பதாக டேட்டாக்கள் சொல்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் திமுக 1,15,709 வாக்குகளை பெற்றது. அது போல் நாம் தமிழர் கட்சி 24,151 வாக்குகளை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துவிட்டன. இதனால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்களிக்காமல் இருக்க முடியாது. யாருக்காவது ஓட்டு போட்டுத்தான் ஆக வேண்டும்.
அந்த வகையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் யாருக்கு ஓட்டு போட்டிருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என கேட்பதும் தவறு. அவர்களாகவே சொல்வதும் தவறு. அப்படியிருக்கும் பட்சத்தில் இதை எப்படி தெரிந்து கொள்வது என யோசித்த போதுதான் தேர்தல் முடிவுகளில் அது எதிரொலித்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.
அதிலும் கடந்த ஆண்டு ஈரோடு லோக்சபா தொகுதிக்கான தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான வாக்குகளையும் 2025 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தல் வாக்குகளையும் ஒப்பீடு செய்தால் ஒன்று புலப்படுகிறது.
ஈரோடு மக்களவை தொகுதி என்பவது குமாரப்பாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.
இந்த மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பெற்ற வாக்குகள் 5,58,849 ஆகும். அவர் குறிப்பாக ஈரோடு கிழக்கில் 86,646 வாக்குகளை பெற்றுள்ளார். அது போல் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 34,817 வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜயகுமார் 12784 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகம் 12,802 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அந்த வகையில் மக்களவை தொகுதியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதியில் திமுக பெற்ற வாக்குகளையும் அதிமுக பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 1,21,463 வாக்குகள் வருகின்றன. இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சந்திரகுமார் பெற்ற 1,15,709 வாக்குகளுக்கு கிட்டதட்ட வந்துவிடுகின்றன.

அது போல் மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 25,586 வருகின்றன. இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சீதாலட்சுமி பெற்ற 24,151 வாக்குகளுக்கு கிட்டதட்ட வந்துவிட்டது.
லோக்சபா தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் வாக்கு வித்தியாசம் திமுகவுக்கு 5754 வருகிறது. அது போல் நாதகவுக்கு 1435 வருகிறது. இவற்றை கூட்டி கழித்து பார்த்தால் இந்த முறை நோட்டாவுக்கான வாக்குகள் 6,109 -க்கு கிட்டதட்ட வந்துவிடுகிறது.
எனவே இந்த டேட்டாக்களை வைத்து பார்க்கும் போது அதிமுக, அதன் கூட்டணி வாக்குகள் எல்லாம் திமுகவுக்கும், பாஜக வாக்குகள் எல்லாம் நாம் தமிழருக்கும் சென்றுவிட்டது அப்பட்டமாக தெரிகிறது. மேலும் இதில் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க மனம் ஒவ்வாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தது பிரதிபலிக்கிறது. இவ்வாறாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். சமூகஊடகங்களில் திமுக கணக்கிலிருந்து பதிவு போடுவோரும் இதையே கூறி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications