ஈரோடு பாம்பு சம்பவம் தெரியுமா? அந்த ஒரு நிமிடம் செய்த காரியம்! பண்ணை வீட்டு நாய் வைரல் வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே, சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வன உயிரினத்தை துன்புறுத்திய நபருக்கு வனத்துறை அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது ஈரோட்டில்?
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர், இ.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் செரியன் அகஸ்டின். இவர் தனது பண்ணை நிலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது பண்ணை நிலத்திற்குள் எதிர்பாராத விதமாக ஒரு சாரைப்பாம்பு புகுந்துள்ளது. பொதுவாக விளைநிலங்களில் காணப்படும் இத்தகைய பாம்புகளை வனப்பகுதிக்குள் விடுவதே முறையான செயலாகும். ஆனால், செரியன் அகஸ்டின் அந்தப் பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, தான் வளர்த்து வரும் வேட்டை நாயை ஏவி அதனைத் தொந்தரவு செய்துள்ளார்.

சாரைப் பாம்புடன் நாய்
தன்னுடைய நாய் பாம்புடன் மல்லுக்கட்டும் காட்சியை மிகவும் ஆர்வத்துடன் வீடியோ ரெக்க்கார்டு செய்த செரியன், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடும் செய்திருந்தார். இந்த வீடியோ குபீரென சோஷியல் மீடியாவில் வேகமாக பரவிவிட்டது.. இதையடுத்து,இ வன உயிரின ஆர்வலர்களின் கவனத்திற்கும் சென்றது.
வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவதையும், அதனை ஒரு பெருமையான விஷயமாக இணையத்தில் பரப்புவதையும் கண்ட ஆர்வலர்கள், இது குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் இந்த புகாரின் பேரில் களமிறங்கிய வனத்துறையினர், சம்பந்தப்பட்ட செரியன் அகஸ்டினின் சமூக வலைதளப் பக்கங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மன்னிப்பு கேட்ட அகஸ்டின்
அதில் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ், அட்டவணை 1-ல் வகைப்படுத்தப்பட்டுள்ள சாரைப்பாம்பை துன்புறுத்துவது மற்றும் அதனை வீடியோ எடுத்துப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பது உறுதி செய்யப்பட்டது.,, இத்தகைய வீடியோக்கள் மற்றவர்களையும் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டும் என்பதால், வனத்துறையினர் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, வன உயிரினத்தை துன்புறுத்திய குற்றத்திற்காக செரியன் அகஸ்டினுக்கு ரூ. 4,000 (அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளின் பிடியில் சிக்கிய பிறகுதான் அகஸ்டினுக்கு தன்னுடைய தவறு தெரியவந்துள்ளது.. இதையடுத்து தவறை உணர்ந்து கொண்டதாக சொன்னதுடன், வருத்தம் தெரிவித்து இன்னொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் அதில் பிராமிஸ் செய்துள்ளார்..
வனத்துறை வார்னிங்
இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் ஒரு எச்சசரிக்கையை விடுத்துள்ளார்கள்.. அதில், "சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக வன உயிரினங்களைத் தொந்தரவு செய்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வளர்ப்புப் பிராணிகளை வைத்து வன உயிரினங்களை வேட்டையாடப் பழக்குவது, அவற்றைத் துன்புறுத்துவது அல்லது வேட்டையாட முயற்சிப்பது போன்றவை கடும் குற்றமாகும்.
குறிப்பாக, இதுபோன்ற செயல்களை வீடியோ எடுத்து இணையதளங்களில் பரப்பினால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications