Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு தாளவாடியில் தாயுடன் உல்லாசமாக இருந்தவரை.. சாக்குமூட்டையில் பார்சல் செய்த மகன்.. வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு தாளவாடியில் சாக்கு மூட்டைக்குள் இருந்த மனித எலும்புக்கூடு சம்பவத்தில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். தாயுடன் உல்லாசமாக இருந்த தொழிலாளியை மகன் சாக்கு மூட்டையில் கட்டி வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை மறைக்க உதவிய உறவினரும் சிக்கினார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தலமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதி தொட்டாபுரம். அடர்ந்த வனப்பகுதியான இங்கு கடந்த ஜூன் 26-ந் தேதி அன்று தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு சாக்குமுட்டை இருந்தது. அதில் மிகவும் துர்நாற்றம் வீசியது.

Erode crime

பிணவாடை வீசியதால் உடனே அவர்கள் ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஆசனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் (பொறுப்பு) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். மிகவும் துர்நாற்றம் வீசிய அந்த சாக்கு மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தார்கள். அதில் மனித எலும்புக்கூடுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இதைத்தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய ஆசனூர் போலீசார், இதுஆணா பெண்ணா, வயது என்ன என்பது குறித்த ஆய்வுக்காக சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் போலீசார், சாக்கு மூட்டையில் கிடந்த மனித எலும்புக்கூடுகள் யாருடையது? லை செய்து அதை சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றது யார் என்ற கோணத்தில் போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வந்தார்கள்.

இதற்கிடையே கடந்த மே மாதம் 27-ந் தேதி தொட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குமார் (வயது 41) என்பவரை காணவில்லை என அவருடைய உறவினர்கள் ஆசனூர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து போலீசார் வனப்பகுதியில் எலும்புக்கூடாக கிடந்தவர் காணாமல் போன குமாராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தலமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியான தொட்டாபுரத்தில் சாக்கு மூட்டையில் கிடந்தது குமாரின் எலும்புக்கூடுகள் என்பதும், அவரை யாரோ கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசிச்சென்றதும் விசாரணையில் உறுதியானது. அதைத்தொடர்ந்து போலீசார் தொட்டாபுரம் பகுதியில் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் தான் போலீசார் தீவிர விசாரணை நடத்துவதை அறிந்த தொட்டாபுரத்தை சேர்ந்த தொழிலாளி நாகமல்லு (வயது 24) என்பவர் கடந்த 5-ந் தேதி திடீர் திருப்பமாக குமாரை தான் கொலை செய்ததாக கூறி தலமலை விஏஓ தம்புராஜிடம் சரணடைந்தார். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நாகமல்லு ஆசனூர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். இதன்படி, நாகமல்லும் அவரது தாய் முத்துமணியும் (43) தொட்டாபுரம் தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். நாகமல்லுவின் தந்தை ராமசாமி டாஸ்மாக்கில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நாகமல்லுவின் தாய்க்கும், அதே பகுதியில் வசிக்கும் குமாருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாம். இதை அறிந்த நாகமல்லு அவரை எச்சரித்தாராம். ஆனாலும் தாயுடனான கள்ளத்தொடர்பை குமார் கைவிடவில்லையாம். இந்தநிலையில் கடந்த மே மாதம் 27-ந்் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார் நாகமல்லு. அப்போது குமாரும், அவரரது தாயும் அங்கு தனிமையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


உடனே குமாரை பிடித்து போலீசில் ஒப்படைக்க கயிற்றால் கட்டிவைத்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் நாகமல்லுவை தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டே இருந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த நாகமல்லு அருகே கிடந்த சுத்தியலை எடுத்து குமாரின் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டாராம்.

இதைத்தொடர்ந்து கொலையை மறைக்க எண்ணிய நாகமல்லுஇ, அவருடைய பெரியப்பா மகன் மாதேவனை (21) துணைக்கு அழைத்துள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டி உள்ளார்கள். வனப்பகுதியில் உடலை வீசிவிட்டால் வனவிலங்குகள் தின்று விடும். நான் தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று உடல் இருந்த மூட்டையை வீசிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி வனத்துறையினர் ரோந்து சென்றபோது சாக்கு மூட்டையில் இருந்த எலும்புக்கூடுகளை எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து அறிந்த நாகமல்லு இனி போலீசார் என்னை பிடித்து விடுவார்கள் என பயந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளார்.இந்ததகவலை போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நாகமல்லுவை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையை மறைத்ததாக முத்துமணியும், உடலை மறைக்க உடந்தையாக இருந்ததாக மாதேவனும் கைது செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+