தினமும் வீட்டுக்கு போங்க.. எடப்பாடி போட்ட போடு.. டார்கெட் "80000".. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக எப்படி செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சில மூத்த நிர்வாகி செங்கோட்டையன் முக்கியமான சில பாயிண்ட்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அடித்து ஆட தொடங்கி உள்ளது. இன்றே எடப்பாடி தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக இரட்டை இலை சின்னம் முடங்குகிறதோ இல்லையோ நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும், தேர்தலில் கண்டிப்பாக நமது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறாராம்.. சின்னம் முடங்கினால் அதற்கான பிளான் பியும் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

கோர்ட்

கோர்ட்

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. எங்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அடித்து ஆட தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது.

ஆலோசனை

ஆலோசனை

இந்த தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கிற்கு திமுக எதுவும் செய்யவில்லை. நம்முடைய ஆட்சியில் கவனம் பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி அதன்பின் கவனிக்கப்படாமல் போய்விட்டது. இதை மக்களிடம் சொல்லுங்கள். 32 வார்டு உள்ளது. எல்லா வார்டுக்கும் உங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட வகையில்செல்லுங்கள். தினமும் மக்கள் வீடுகளுக்கு செல்லுங்கள். ஒருமுறை சென்றுவிட்டோம் என்று விடாதீர்கள். மீண்டும் மீண்டும் கூட செல்வதற்கு தயாராக இருங்கள். மக்களிடம் உண்மையை சொல்லுங்கள். திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு வாக்கு கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாராம்.

வாக்குகள்

வாக்குகள்

ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இதில் 80 ஆயிரம் வாக்குகளை வென்றாலே பெரும்பாலும் ஒரு வேட்பாளர் வெற்றிபெற முடியும். இதனால் 80 ஆயிரம் வாக்குகளை எப்படியாவது குறைந்தபட்சம் பெற வேண்டும் என்று செங்கோட்டைன் நேற்று நடந்த கூட்டத்தில் பேசி இருக்கிறாராம்.

முதலியார்

முதலியார்

முக்கியமாக இங்கே முடிவுகளை தீர்மானிக்கும் 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று செங்கோட்டையன் பேசி இருக்கிறாராம். இந்த தேர்தலுக்காக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்துள்ளது . செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+