ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை இந்த நாடே உற்று நோக்குகிறது.. பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி
எழுதாத பேனாவுக்கு நிதி ஒதுக்குவதா என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
ஈரோடு: எழுதாத பேனாவுக்கு நிதி ஒதுக்குவதா என ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இன்று நாடே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிில் எதிரொலிக்கும். அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு சிந்தாமல் சிதறாமல் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. எங்கே பார்த்தாலும் ரவுடியிஸம் , கட்ட பஞ்சாயத்து, மது விற்பனை தலைத்தூக்கி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்ததாக இருக்கிறது. அதனால் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு விசைத்தறி உற்பத்தியாளர்கள், அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது.

திமுக ஆட்சி
ஆனால் திமுக ஆட்சியில் பொறுப்பேற்றவுடனேயே இலவச வேட்டி சேலை வழங்கவில்லை. இதனால் விசைத் தறி கூடங்கள் வேலையில்லாமல் மூடப்பட்டு விட்டன. அங்கிருந்த தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் செய்ய சென்றுவிட்டார்கள். திமுகவினர் வந்து பணம் கொடுத்து வாக்கு கேட்டால் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம்தான். ஆனால் ஓட்டை அதிமுகவின் இரட்டை இலைக்கு போட்டுவிடுங்கள்.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. சொத்து வரியும் உயர்ந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 என்ற திமுக வாக்குறுதியை திமுக அடியோடு மறந்துவிட்டது. தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், இலவச மடிக்கணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது.

நீட் தேர்வு வாக்குறுதி ரத்து
நீட் தேர்வு வாக்குறுதி ரத்து என்றார்கள். அதை ஏன் நிறைவேற்றவில்லை. இனியும் திமுக மக்களை ஏமாற்ற வேண்டாம். எழுதாத பேனாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுபபில் ரூ 500 கோடி ஊழல் நடந்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. திமுகவின் பயமே நமக்கான வெற்றி. ஈரோடு மாவட்ட எஸ்பி, திமுக மாவட்டச் செயலாளர் போல் செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications